Cinema
ஓடும் பேருந்தில் ஆபாச செயலில் ஈடுபட்ட இளைஞர்.. போலிசில் பிடித்து கொடுத்த பிரபல மலையாள நடிகை !
கேரளாவில் தற்போது வளர்ந்து வரும் பிரபலமாக இருப்பவர் நடிகை நந்திதா சங்கரா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி வீடியோ, புகைப்படம் என வெளியிடுவது உண்டு. இவர் ஒரு மாடல் அழகியாவார்.
இந்த சூழலில் சம்பவத்தன்று நந்திதா, திருச்சூரிலிருந்து கொச்சி செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரது அருகில் சவாத் ஷா என்ற இளைஞர் ஒருவர் அமர்ந்திருந்துள்ளார். அருகே அமர்ந்திருந்ததால், அந்த இளைஞர் இவரிடம் பேச்சு கொடுத்தார். இருவரும் பேசி கொண்டே வந்த நிலையில், திடீரென அந்த இளைஞர் நந்திதா மேல் கை வைத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் மற்றோரு கையால் அவர் சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை கண்டதும் அதிர்ந்த நந்திதா, உடனே தனது மொபைல் போனில் இதனை வீடியோவாக எடுத்துள்ளார். மேலும் அவரிடம் சண்டையிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சண்டையை கண்ட நடத்துநர், என்ன என்று அருகே வந்து கேட்கவே, நந்திதா நடந்ததை கூறியுள்ளார்.
இதையடுத்து ஓட்டுநர், மற்றும் நடத்துநர் உடனே அந்த இளைஞரை அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைக்க எண்ணினர். ஆனால் அந்த இளைஞர் பேருந்தில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். இதனை கண்டதும், அந்த இளைஞரை அனைவரும் பிடித்து வைத்து போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து நந்திதாவும், அந்த இளைஞர் மேல் புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், அந்த இளைஞரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து நடிகை நந்திதா, இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டு உதவியவர்களுக்கு நன்றியும், இந்த சம்பவத்துக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!
-
வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்! : சென்னை மாநகராட்சி தகவல்!