Cinema
“மூளை மாற்று அறுவை சிகிச்சை குறித்த கதையா பிச்சைக்காரன் 2 ?” - ரிலீஸ் தேதியுடன் வெளியானது ட்ரைலர் !
தமிழில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் விஜய் ஆண்டனி. 2005-ல் விஜய் நடிப்பில் வெளியான 'சுக்ரன்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அதன்பிறகு பல்வேறு படங்களுக்கு இசையமைத்தார். வெறும் இசைத்துறையில் மட்டும் ஆர்வம் இல்லதாவராக இருக்கும் இவர், 2006-ம் ஆண்டு வெளியான 'கிழக்கு கடற்கரை சாலை' படத்தில் சிறப்பு தோற்றத்தில் திரையில் அறிமுகமானார்.
அதன்பிறகு 2012-ல் ஜீவா சங்கர் இயக்கத்தில் வெளியான 'நான்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து சலீம், இந்தியா பாகிஸ்தான், எமன், சைத்தான், பிச்சைக்காரன் என பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதில் சசி இயக்கத்தில் வெளியான 'பிச்சைக்காரன்' படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்ததோடு, அந்த படம் நல்ல லாபமும் ஈட்டியது.
விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கவுள்ளதாக விஜய் ஆண்டனி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் ரித்திகா சிங், காவ்யா தப்பர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படத்தின் மூலம் விஜய் ஆண்டனி முதன்முதலில் இயக்குநராகவும் அறிமுகமாகிறார். இதனை இவரது ப்ரோடுக்ஷன் நிறுவனமான Vijay Antony Film Corporation தயாரித்துள்ளது.
இதற்கான மோஷன் போஸ்டர் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இதன் ஸ்னீக் பீக் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதில் விஜய் ஆண்டனிக்கு வில்லன் யார் என்று தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பிச்சைக்காரன் 2 ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், இன்று வெளியாகியுள்ளது. இதன் ட்ரைலரில் விஜய் ஆண்டனி 2 கதாபாத்திரத்தில் நடிப்பது போல் உள்ளது. முன்னதாக வெளியான ஸ்னீக் பீக்கில் மூளை மாற்று அறுவை சிகிச்சை பற்றி பேசப்பட்டிருந்தது.
தற்போது இந்த ட்ரைலரில் விஜய் ஆண்டனி 2 கதாபாத்திரத்தில் வருவது, விஜய் ஆண்டனி ஒரு ரகசிய மருத்துவ கண்காணிப்பில் இருப்பது உள்ளிட்ட சீன்கள், கூடு விட்டு கூடு பாய்வதை போல், மூளையை மாற்றி வைத்து செய்யும் பித்தலாட்டத்தை வைத்து படத்தின் மையக்கரு உள்ளதாக தெரிகிறது.
எனினும் இதுவரை உலகில் யாருக்கும் மூளை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை. இது அறிவியல் ரீதியாக மிகவும் கடினம், ஆபத்து என்பதால் இதனை யாரும் செய்துகொள்ளவில்லை. இதற்கு எந் நாட்டு அரசும் ஒப்புதலும் அளிக்கவில்லை. ஏனெனில் மூளையை மாற்றி அறுவை சிகிச்சை மேற்கோள்வது என்பது மனித குலத்துக்கு ஆபத்தாய் முடியும் சூழலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படமானது வரும் மே 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Also Read
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!
-
இரட்டை இலக்கை எட்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமை!