Cinema
“வீரமே ஜெயம்..” - ‘மாவீரன்’ மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன் !
'எதிர் நீச்சல்', வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் வெள்ளித்திரையில் மிகவும் பிரபலமானவர் சிவகார்த்திகேயன். 'பிரின்ஸ்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சிவகார்த்திகேயன், நடித்தாலே படம் ஹிட் என்று சொல்லும்படி ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டுள்ளார்.
அவரது நடிப்பில் வெளியான ரஜினி முருகன், ரெமோ, காக்கி சட்டை, வேலைக்காரன், கனா, டாக்டர், டான் என பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று மாஸ் ஹிட் கொடுத்தது. இருப்பினும் அண்மையி வெளியான 'பிரின்ஸ்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்ட அளவு வரவேற்பு கிடைக்கவில்லை.
தற்போது இவரது கை வசம் அயலான், மாவீரன் என்று இரண்டு படங்கள் உள்ளது. இதில் மாவீரன் படத்தை யோகி பாபு நடிப்பில் வெளியாகி பெரிய அளவு பெயர் பெற்ற 'மண்டேலா' படத்தை இயக்கிய இயக்குநர் அஸ்வின் இயக்குகிறார்.
இந்த படத்தின் முதல் பார்வை (பர்ஸ்ட் லுக்) போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகியது. அந்த போஸ்டரில் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 'தளபதி' படத்தில் ரஜினியின் கெட்டப் போன்று சிவகார்த்திகேயன் தோற்றமளித்திருந்தார். இந்த போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு மட்டுமின்றி எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இதன் வெளியீடு எப்போது என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இன்று இதன் அப்டேட் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின. அதன்படி இந்த படத்தின் மாஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன், யோகி பாபு, அதிதி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து மடோன் அஸ்வின் இயக்கியுள்ள 'மாவீரன்' படம் வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து அதில், 'வீரமே ஜெயம்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த படத்தின் மேக்கிங் வீடியோவையும் பகிர்ந்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் தமிழில் 'மாவீரன்' என்ற பெயரிலும், தெலுங்குவில் 'மகாவீருடு' என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!
-
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!
-
"ஆள் பிடிப்பதற்காகவே த.வெ.க ஆட்சி நடக்கிறது!" - ஆளுநரிடம் ஆர்.எஸ்.பாரதி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!