Cinema
“ஐயோ.. அந்த பொண்ணா.. ரொம்ப பயங்கரமான ஆளாச்சே..” நயன் குறித்து விக்னேஷ் சிவனிடம் பகிர்ந்த சுஹாசினி !
தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர்தான் மணிரத்னம். இவரது இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் இன்றளவும் நின்று பேசுகிறது. இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படம் இந்திய அளவில் மாபெரும் ஹிட் கொடுத்தது.
இவரது மனைவி நடிகை சுஹாசினி. இவர் தமிழில் 90-களில் முன்னணி நடிகையாக இருந்தார். 1979- உதிரிப்பூக்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர், தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் ரஜினி, பிரபு, சத்யராஜ், மோகன் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். 90-களில் முன்னணி நடிகையாக இருந்த இவர் பலருக்கும் கனவு கன்னியாகவே இருந்தார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமும் இருந்தது.
கமல்ஹாசனின் உறவினரான இவர், மணிரத்னத்தை 1988-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகும் பல படங்களில் நடித்தார். தொடர்ந்து அம்மாவாக, குணசித்திர கதாபத்திரமாக இவர் நடித்து வந்தார். தற்போதும் கூட தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அதோடு முக்கிய பிரபலங்களையும் அவ்வப்போது பேட்டி எடுத்து வருகிறார்.
அந்த வகையில் அண்மையில் பிரபல இயக்குநரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவனை வைத்து பேட்டி எடுத்தார். அப்போது விக்னேஷ் சிவனிடம் வேலை, குடும்பம், தொழில் உள்ளிட்ட விஷயங்களை பற்றி கேள்வி கேட்க, அவரும் கலகலப்பாக பதில் அளித்தார். அந்த சமயத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா கூட்டணியில் உருவான முதல் படமான 'நானும் ரெளடி தான்' படத்தை பற்றி இருவரும் கலந்துரையாடினர்.
நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாக ராதிகா நடித்திருப்பார். அந்த படத்தில் ராதிகாவுக்கு, விக்னேஷ் சிவனின் அம்மா பெயரான மீனா குமாரி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும். எனவே இந்த படம் குறித்து அவரது தாய் எதுவும் கூறவில்லையா என்றும், போலீசை விட ரௌடிகளுடன் சகவாசம் எப்படி வந்தது என தாய் கேட்கவில்லையா என்றும் சுஹாசினி கேள்வி எழுப்பினார்.
அதற்கு விக்னேஷ் சிவன், அப்படி எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். அதோடு சுஹாசினி அந்த படத்தில் நடித்த ராதிகா சொன்ன ஒரு விஷயத்தை பகிர்ந்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது, நானும் ரெளடி தான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சத்தமாக இருந்தபோது, நயன்தாரா 'சைலென்ஸ்' என்று ரொம்பவே சத்தமாக கத்திவிட்டாராம். இதனை கேட்டு ஒட்டுமொத்த ஷூட்டிங் ஸ்பாட்டும் அமைதியாக இருந்ததாம்.
அதான் ராதிகா என்னிடம் கூறும்போது, 'நானே ஷூட்டிங் ஸ்பாட்டில் டெரராகத்தான் இருப்பேன். ஆனால் இந்தப் பொண்ணு நயன்தாரா என்னைவிட ரொம்ப டெரரா இருப்பா போல. சைலென்ஸ்ங்றதையே அவ்ளோ சத்தமா சொல்றா' என்று கூறியதாக சுஹாசினி கூறினார். அதனையடுத்து நயன்தாரா கொஞ்சம் டெரர்தான் என விக்னேஷ் சிவனும் கூறியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!