Cinema
“என்ன நம்பிட்டீங்களா.. ஏப்ரல் Fool..” - ரசிகர்களை கலாய்த்த ஆடை சர்ச்சை நாயகி உர்பி ஜாவேத் ! | Urfi Javed
இந்தி திரையுலகில் தற்போது சர்ச்சை நாயகையாக இருப்பவர் நடிகை உர்பி ஜாவித். 2016-ல் இந்தி சீரியல் ஒன்றில் அறிமுகமான இவர், 'சந்திர நந்தினி' தொடரின் மூலம் பிரபலமானார். அதன்பிறகு தொடர்ச்சியாக சில சீரியல்களில் நடித்து வந்த இவர், கடந்த 2021-ம் ஆண்டு இந்தி ஓடிடி தளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் 1-ல் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.
அதில் பிரபலமான இவர், தனது பிரபலத்தை விட கூடாது என்று புது விதமாக ரசிகர்கள் முன்னிலையில் தோற்றமளித்தார். அதில் இவர் ஆடைகள்தான் சர்ச்சையில் சிக்கியது. பொது இடங்களில் படு கவர்ச்சியாக ஆடைகளை அணிந்து வருவார். இதனால் இவர் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். தொடர்ச்சியாக பழங்கள், இரும்பு செயின், ஜீன், கைக்குட்டை, வலை உள்ளிட்டவையை இவரது ஆடைகளாக பயன்படுத்துவார்.
இப்படி தொடர்ச்சியாக கவர்ச்சி உடையில் பொது நிகழ்ச்சி இடங்களுக்கு சென்று பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவராக இருக்கும் இவர், சமூக வலைதள பக்கத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் (மார்ச் 31) தனது ட்விட்டர் பக்கத்தில் "நான் அணிந்த உடைகள் மூலம் பலரது உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் என்னை வேறு மாதிரியான உடையில் பார்ப்பீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் இவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் தாங்கள் எப்படி உடை அணிய வேண்டுமோ அது உங்கள் சுதந்திரம் என்றும், யார் சொன்னாலும் கேட்காதீர்கள் என்றும் பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் சிலர் நிம்மதி என்றும், வாழ்த்துக்கள் என்றும், ஆச்சர்யம் என்றும் கமெண்ட் பதிவிட்டு வந்தனர்.
அதோடு உர்பியின் திடீர் முடிவால் ரசிகர்கள் குழம்பி போய் இருந்தனர். இந்த குழப்பத்துக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது ரசிகர்களுக்கு 'ஏப்ரல் Fool' என்று மற்றொரு பதிவையும் செய்துள்ளார். அந்த பதிவில், "April fool.. நான் ரொம்ப சிறுபிள்ளைத்தனமா இருக்கிறேன் என்று எனக்கே தெரியும்" என்று சிரிக்கும் எமோஜியை வைத்து பதிவிட்டுள்ளார்.
இதற்கு பலரும் சிரிக்கும் எமோஜியுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆடை சர்ச்சை நாயகி உர்பி ஜாவேத் தனது ரசிகர்களை ட்விட்டரில் ஏப்ரல் Fool செய்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!