Cinema
இளையராஜாவின் ஹிட் பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்த கலைஞர் மறைவு.. திரைத்துறையில் தொடரும் சோகம் !
இசைத்துறையில் தற்போது வரை முன்னணி கலைஞராக இருப்பவர் இளையராஜா. 80s, 90s கிட்ஸ்களை வெகுவாக தனது இசையின் மூலம் கவர்ந்த இவர், இன்று இருக்கும் பல இசை கலைஞர்களையும் அறிமுகப்படுத்தினார். அந்த வகையில் இளையராஜா இசையில் உருவான பல ஹிட் பாடல்களுக்கு flute (புல்லாங்குழல்) வாசித்து வந்தவர்தான் சுதாகர்.
1977-ல் வெளியான 'கவிக்குயில்' என்ற படத்தில் இருந்தே சுதாகர் இளையராஜாவுடன் பணிபுரிந்து வந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற சின்னக்கண்ணன் அழைக்கிறான்" என்ற பாடலுக்கு இவர்தான் புல்லாங்குழல் வாசித்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக 'பயனங்கள் முடிவதில்லை' படத்தில் "இளையநிலா பொழிகிறதே", 'உதிரிப்பூக்கள்' படத்தில் "அழகிய கண்ணே.. உறவுகள் நீயே", 'மூன்றாம் பிறை' படத்தில் இருந்து "கண்ணே கலைமானே", நினைவெல்லாம் நித்யா' படத்தில் "பணிவிழும் மலர்வணம்" என பல ஹிட் பாடல்களுக்கு சுதாகர் புல்லாங்குழல் வாசித்துள்ளார்.
அப்போதே நஞ்சப்பா மற்றும் குணசிங் போன்ற பிரபல புல்லாங்குழல் கலைஞர்கள் காட்சியில் ஆதிக்கம் செலுத்தியபோதும் சுதாகர் ஒரு முத்திரையைப் பதித்து ஒரு இடத்தைப் பிடித்தார். புல்லாங்குழல் தவிர, மேற்கத்திய இசைக்கருவியான ரெக்கார்டரையும் அவர் வாசித்தார். தொடர்ந்து திரைத்துறையில் பயணித்து பல ஹிட் பாடல்களுக்கு பின்னணி இசைகொடுத்தார்.
தனக்கு மற்ற இசைக்கலைஞர்களைப் போல இவருக்கு நோட்ஸ் படிக்கத் தெரியாது என்றும், தன்னால் நினைவிலிருந்து எல்லாவற்றையும் வாசிக்க முடியாது என்றும் சுதாகரே ஒருமுறை கூறியுள்ளார். இந்த குறைபாடு இருந்தபோதிலும், இளையராஜா தனது முழு திறமையின் காரணமாக அவரை தனது முக்கிய புல்லாங்குழல் கலைஞராகத் தக்க வைத்துக் கொண்டார்.
இளையராஜாவுடன் இணைவதற்கு முன்பு சுதாகர், ஜி.கே. வெங்கடேஷ் என்ற இசைக்கலைஞருடன் பணியாற்றினார். ஜி.கே. வெங்கடேஷ் வெங்கடேஷிடம் இளையராஜா ஆரம்ப காலத்தில் உதவியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இளையராஜாவுடன் தொடர்ந்து பயணித்து இசைத்துறையில் புல்லாங்குழல் ஊதுபவர்களில் முக்கியமாக கருதப்பட்ட சுதாகர் இன்று காலமானார். இவரது மறைவுக்கு இசைக் கலைஞர்கள், ரசிகர்கள், திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக கடந்த வாரம் ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், டி.இமான், அனிருத் என பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து பணியாற்றிய பிரபல கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் உடல் நலகுறைவால் உயிரிழந்தார்.
அதற்கு முன்னதாக அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி பிரபலம், காமெடி நடிகர் கோவை குணா உடல் நலக்குறைவால் காலமானார். அதோடு வாணி ஜெயராம், டி.பி கஜேந்திரன், மயில்சாமி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் உயிரிழந்தனர். இப்படி தொடர்ந்து திரைத்துறையில் இருக்கும் முக்கிய பிரபலங்கள் உயிரிழந்து வரும் செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!