Cinema
ஆஸ்கர் விருதை வென்ற 90-ஸ் நாயகன்.. 600 பவுண்டு எடையோடு நடித்து அசத்திய ’மம்மி’ பட ஹீரோ!
ஆண்டுதோறும் திரைத்துறையின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95வது ஆஸ்கர் விருதுகள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் உலகம் முழுவதுமுள்ள சிறந்த பாடல்கள், திரைப்படங்கள், நடிகர்கள் என அனைவரும் போட்டியிட்டு விருதுகள் வழங்கப்படும்.
அதில் இந்த ஆண்டு சிறந்த பாடலுக்கான விருதை RRR படத்தில் இடம்பெற்ற "நாட்டு நாட்டு" பாடல் வென்றுள்ளது. ஆஸ்கர் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. இந்த பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர்.
அதேபோல் மொத்தம் 11 விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்த `Everything Everywhere All At Once' திரைப்படம் சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த படம், சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 7 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
தொடர்ந்து சிறந்த ஆடை வடிவமைப்பு பிரிவில் மார்வெல்ஸின் அண்மையில் வெளியான 'Black Panther: Wakanda Forever' வென்றுள்ளது. அதோடு சிறந்த ஆவணக் குறும்படம் பிரிவில் ஆஸ்கர் விருதை இந்தியாவின் ‘The Elephant Whisperers' வென்றுள்ளது.
அதேபோல் சிறந்த நடிகருக்கான விருதை 'தி மம்மி' படத்தின் கதாநாயகனான பிரெண்டன் ஃப்ரேசர் (Brendan Fraser) வென்றுள்ளார்.
1999-ல் வெளியான திரைப்படம் தான் 'தி மம்மி'. எகிப்தில் இருக்கும் மம்மி கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு ஹாரர் திரில்லராக இருக்கும் இந்த படத்தின் கதாநாயகன் 90-ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த ஒரு நடிகராகவும் இருந்தார்.
1991-ல் திரையில் தோன்றிய இவர், இந்த படத்தின் மூலம் உலக புகழ் பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர் மம்மி 2, 3 பாகங்களிலும் நடித்துள்ளார். 2014-க்கு பிறகு சிறிது இடைவெளி விட்டு 2019-ல் மீண்டும் நடிக்க தொடங்கினார். தொடர்ந்து 2022-ல் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம்தான் 'The Whale'
இந்த படத்துக்காக தனது உடலை முழுவதுமாக குண்டாக்கி தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதோடு இந்த படத்தில் 600 பவுண்டுகள் எடையுள்ள ஒரு மனிதராக கடினமான சிகை அலங்காரங்கள் எல்லாம் செய்து நடித்திருந்தார். இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த படத்துக்காக இவர் 20-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார். தொடர்ந்து இவர் தற்போதும் படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இவருக்கு இந்த படத்துக்கான சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முந்தைய கடந்த 2003-ம் ஆண்டு தான் ஒரு கோல்டன் குளோப் விருதில் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானதால் அந்த விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இவர் ஆஸ்கர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார். அவரின் விருது ஏற்புரை தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக இவர் நடித்திருந்த Crash என்ற படம் 1996-ல் ஆஸ்கர் விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!