Cinema
பிரபல பாலிவுட் நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்: இந்தியத் திரையுலகம் அதிர்ச்சி!
பாலிவுட் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தவர் சதீஷ் சந்திர கவுசிக். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் 1987ம் ஆண்டு வெளியான 'மிஸ்டர் இந்தியா' என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானர்.
அதன்பின்னர், 'ஜானே பிதோ யாரோன்', 'தீவானா மஸ்தானா', 'உட்டா பஞ்சாப்' போன்ற படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி மிகவும் பிரபலமானார். நடிப்பதோடு மட்டுமல்லாமல் சல்மான் கானை வைத்து 'தேரே நாம்' படத்தை இயக்கியுள்ளார்.
மேலும், கரீனா கபூர் கான், துஷ்ரா கபூர் இணைந்து நடித்த 'முஜ்ஹே குச் ஹேக்னா ஹை' படத்தையும் இயக்கி பலரின் பாராட்டையும் பெற்றார். கங்கனா ரணாவத் நடித்து விரைவில் வெளியாகியுள்ள 'எமர்ஜென்சி' திரைப்படத்திலும் சதீஷ் கவுசிக் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகரும், இயக்குநரமுன சதீஷ் கவுசிக் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக நடிகர் அனுபம் கேர் தெரிவித்துள்ளார். மேலும் நேற்று இரவு அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனே ஒட்டுநரிடம் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறியுள்ளார். ஆனால் அவர் காரில் செல்லும் வழியிலேயே நடிகர் சதீஷ் கவுசிக் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சதீஷ் கவுசிக் மறைவிற்கு சக நடிகர்கள், ரசிகர்கள், அரசியல் கட்சித் தலைவர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!