Cinema

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை.. நாளை வெளியாகும் அந்த 9 படங்கள்.. பட்டியல் இதோ !

தற்போதுள்ள காலகட்டத்தில் பல்வேறு மொழிப்படங்களையும் மக்கள் ரசிக்கிறார்கள். உலகம் முழுக்க நாள்தோறும் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மொழியிலும் குறைந்தது ஒரு படமாவது வெளியாகும். அந்த வகையில் இந்தியாவில் நாள் ஒன்றுக்கு ஒரு திரைப்படம் வெளியானால், கூடவே இன்னும் ஒரு படமாவது வெளியாகும்.

அதிலும் பண்டிகை காலக்கட்டத்தில் சொல்லவே வேண்டாம்.. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி திரை ரசிகர்களுக்கு ஆரவாரத்தை ஏற்படுத்துவர். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, தமிழ்நாட்டில் 2 பெரிய நடிகர்களின் படங்கள் வாரிசு - துணிவு நேரடியாக மோதியது. இதனால் சில படங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கம்போல் தற்போது படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது கடந்த மாதம் 25-ம் தேதி ஷாருக் நடிப்பில் 'பதான்' படம் வெளியானது. இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது திரையரங்கில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து இந்த மாதம் (பிப்ரவரி) திரையரங்குகளில் பல்வேறு படங்கள் வெளியாகி வருகிறது.

அதன்படி கடந்த 3-ம் தேதி ஒரே நாளில் மட்டுமே திரையரங்கில் சுமார் 7 படங்கள் வெளியானது. மைக்கேல், ரன் பேபி ரன், பொம்மை நாயகி, தி கிரேட் இந்தியன் கிட்சன், நான் கடவுள் இல்லை உள்ளிட்ட படங்கள் வெளியானது. தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் படங்கள் வெளியானது. அதன்படி இந்த வாரம் வெளியீட்டுக்காக கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சுமார் 9 படங்கள் தயார் நிலையில் உள்ளது. அந்த பட்டியல் இதோ :-

பிப்ரவரி 24 :

1. தக்ஸ் (Thugs) - (தமிழ்)

இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் பாபி சிம்ஹா, முனீஷ்காந்த், ஆர் கே சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் நாளை வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்துள்ளளார்.

2. சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் (Single Shankarum Smartphone Simranum) - (தமிழ்)

முழுக்க முழுக்க மொபைல் போன் வைத்தே எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் ஷா பி.என் இயக்கியுள்ளார். இதில் மிர்ச்சி சிவா, மெகா ஆகாஷ், பாடகர் மனோ, அஞ்சு குரியன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதன் ஸ்னீக் பீக், ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் நாளை (பிப்., 24) திரையரங்கில் வெளியாகவுள்ளது.

3. வெள்ளிமலை (Vellimalai) - (தமிழ்)

சுப்பிரமணியன், அஞ்சு கிருஷ்ணா, வீர சுபாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை ஓம் விஜய் இயக்கியுள்ளார். நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

4. குற்றம் புரிந்தால் (Kuttram Purinthal) - (தமிழ்)

ஆதிக் பாபு, அர்ச்சனா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை டிஸ்னி என்ற இயக்குநர் இயக்கியுள்ளார். இவர் முன்னதாக இரும்பு மனிதன் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

5. Ntikkakkakkoru Premondarnn (மலையாளம்) - பிப். 24

6. Selfiee (இந்தி)

7. Marlowe (ஆங்கிலம்)

8. Missing (ஆங்கிலம்)

9. Cocaine Bear (ஆங்கிலம்) - உள்ளிட்ட படங்கள் திரைக்கு நாளை வரவுள்ளது.

Also Read: “ரோஹித் ஷர்மாவுக்கு என்னைப்போல DANCE ஆடத் தெரியாது..” -வெளியான மீம்களுக்கு மிர்ச்சி சிவா கலகல பதில் !