Cinema
“என்னைக்குமே படைச்சவன் துணை நமக்கு..” - டாப் 10-ல் 3 இடம்.. OTT-யிலும் மாஸ் காட்டும் 'துணிவு' !
தமிழில் முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான படம்தான் துணிவு. இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம், விஜயின் வாரிசுவுடன் நேரடியாக மோதியது. இதில் யார் பொங்கல் வின்னர் என்று ரசிகர்கள் மத்தியில் போட்டிகள் நிலவியது.
அதன்படி படம் வெளியாகி முதல்நாள் வசூலில் துணிவு படம் மாபெரும் வசூல் வேட்டை செய்தது. அதன்பிறகு வாரிசு தொடர்ந்து முன்னிலையில் இருந்தாலும், துணிவுக்குள்ள மவுசு குறையாமல் இருந்தது. தொடர்ந்து தற்போதுவரை திரையரங்கில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த படம் உலக அளவில் பல்வேறு நாடுகளில் வெளியானது.
தொடர்ந்து இந்த படம் கடந்த 8-ம் தேதி Netflix ஓடிடியில் வெளியானது. அப்போதில் இருந்து இப்போது வரை ஓடிடியிலும் துணிவு முன்னிலை வகித்து வருகிறது. திரையரங்கை போல டிஜிட்டல் தளத்திலும் ரசிகர்கள் மத்தியில் அமோகமாக வரவேற்பு பெற்று வரும் இந்த படம் தற்போது சாதனை படைத்து வருகிறது.
அதன்படி இன்று உலகளவில் கடந்த பிப்ரவரி 6 முதல் 12 வரை அடிப்படையில் அதிகளவில் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத பிற மொழி படங்களின் டாப் 10 பட்டியலை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் அஜித்தின் துணிவு திரைப்படம் 3-வது இடத்தில் உள்ளது. மேலும் திணிவு படத்தின் இந்தி வெர்ஷன் 4-வது இடத்திலும் உள்ளது.
அதோடு இந்திய அளவில் உள்ள திரைப்பட பட்டியலில் துணிவு தெலுங்கு வெர்ஷன் டாப் 10-ல் உள்ளது. இதன்மூலம் நெட்ப்ளிக்ஸின் டாப் 10 பட்டியலில் அதிக இடங்களை பிடித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை துணிவு திரைப்படம் பெற்றுள்ளது.
இதில் 3-வது இடத்தை பிடித்திருக்கும் தமிழ் துணிவு - அந்த வாரத்தில் மட்டுமே 40 லட்சத்து 50 ஆயிரம் மணிநேரம் ஸ்டிரீம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்தியா, பஹ்ரைன், பங்களாதேஷ், மலேசியா, மால தீவுகள், மொரிஷியஸ், நைஜீரியா, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சிங்கப்பூர், இலங்கை & ஜக்கிய அரபு அமீரகம் போன்ற 13 உலக நாடுகளில் Netflix தளத்தில் துணிவு திரைப்படம் டாப் 10 வரிசையில் உள்ளது.
இதனால் திரையரங்கை தொடர்ந்து ஓடிடியிலும் அஜித்தின் துணிவு படம் சாதனை படைப்பதாக அவரது ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !