Cinema
“தாய் வீட்டிற்கு வந்த மாதிரி இருக்கு..” - திருமணம் முடிந்து முதல் முறை சென்னை வந்த ஹன்சிகா பேட்டி !
'எங்கேயும் காதல்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஹன்சிகா. அதன்பிறகு, மாப்பிள்ளை, வேலாயுதம், தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற தமிழ் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தாலும், தெலுங்கு திரையிலும் இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, உதயநிதி ஸ்டாலினுடன் மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களும் இவருக்கு நல்ல பெயர் வாங்கிக்கொடுத்தது. இதனிடையே சுந்தர் சி-யின் அரண்மனை படத்தின் மூலம் பேயாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். அதோடு இவரது நடிப்பில் அண்மையில் 'மகா' என்ற படம் வெளியாகியது.
முன்னதாக சிம்புவுடன் காதல் உறவில் இருந்த ஹன்சிகா, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். இதையடுத்து ஹன்சிகாவின் திருமணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. சமீபத்தில் கூட ஹன்சிகாவின் சகோதரர் திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது.
குடும்பத்தாரின் உறுதுணையால் தனது நடிப்பில் மும்முரம் காட்டி வந்த நடிகை ஹன்சிகாவுக்கு தற்போது 31 வயதாகும் நிலையில், அவரது திருமண செய்திக்காக அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக 2022 ஆண்டின் இறுதிக்குள் இவரது திருமணம் நடைபெறும் என தகவல்கள் வெளியானது.
அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி ஹன்சிகாவுக்கும், தொழிலதிபர் ஒருவருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் பழமையான ஜெய்ப்பூர் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பு படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதால், அதனை மீண்டும் படங்களில் நடிப்பதற்காக நடிகை ஹன்சிகா மும்பையிலிருந்து விமானத்தில் இன்று சென்னை வந்தார். அப்போது சென்னை விமான நிலையத்தில் நடிகை ஹான்சிகாவை ரசிகர், ரசிகைகள் உற்சாகமாக வரவேற்றனர். மாலை அணிவித்தும் ரோஜாப் பூ தந்தும் வரவேற்றனர்.
பின்னர் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஹன்சிகா, "தாய் வீட்டிற்கு மகள் வரும் போது எப்படி இருக்குமோ அதுபோல் உணர்கிறேன். ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். நந்தகோபால் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது. மேலும் இந்த ஆண்டு எனது 7 படங்கள் வர போகிறது. இந்தாண்டு எனக்கு மிகவும் லக்கியானதாக உள்ளது.
தற்போது நான் சென்னையில் ஒரு மாத படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள உள்ளேன். எனது திருமண வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கிறது. இன்றைய கால சமுதாயமாக உள்ளதால் எல்லாரும் சமம். சினிமா படப்பிடிப்புக்காக வந்து உள்ளேன். கல்யாண வாழ்க்கைக்கு பின் மோதிரம் தான் மாறி உள்ளது." என்றார்.
Also Read
-
“இன்றும் கழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் நாகூர் ஹனிபா” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
டென்ஷனா இருந்தா... VIBE WITH MKS நிகழ்ச்சியில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வடகிழக்கு பருவ மழையால் பாதித்த பயிர்கள்: ரூ.289.63 கோடி நிவாரண நிதி அறிவித்த அமைச்சர் MRK பன்னீர்செல்வம்
-
போராட்டம் வாபஸ் - 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!