Cinema
“எல்லாரும் ரொம்ப ஹாப்பி.. வந்தாச்சு நம்ம GP..” -வருகிறது Cooku with கோமாளி சீசன் 4: ரசிகர்கள் கொண்டாட்டம்
தனியார் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக இருப்பது விஜய் டிவி. டாப் 5-ல் முதன்மையாக விளங்கும் இந்த தொலைக்காட்சியில் சீரியல்கள், ரியலிட்டி ஷோ, சமையல், மினி பைட், படங்கள் என பல ஒளிபரப்பாகும். விஜய் டிவியில் வந்தால் போதும், அவர்கள் அதன்பிறகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாஇவிடுவார்.
விஜய் டிவி போல் இருக்கும் மற்ற தொலைக்காட்சிகள், சமையல் நிகழ்ச்சியை ஒரு சமையல் குறிப்பு போல் வழங்கி வரும். ஆனால் விஜய் டிவியில் சமையல் நிகழ்ச்சியை வெறும் சமையல் நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், பொழுதுபோக்கு அம்சத்துடன் வழங்க முடிவு செய்தது. அந்த வகையில் Cooku with கோமாளி என்ற தலைப்புடன் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு இதன் முதல் சீசன் ஒளிபரப்பானது. இது வெளியாகி குடும்பங்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதோடு இதற்கு என்று தனி ரசிகர் கூட்டமே உருவானது. மேலும் முதல் சீசனில் போட்டியாளர்களாக ஞானசம்பந்தம், ரம்யா பாண்டியன், பிரியங்கா ரோபோ சங்கர், தாடி பாலாஜி, உமா ரியாஸ் கான், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட 8 பேர் பங்கேற்றனர். இதில் முதல் வெற்றியாளராக வனிதா விஜயகுமாரும், இரண்டாவதாக உமா ரியாஸ் கானும் அறிவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து இதன் அடுத்த சீசன் 2 வந்தது. அதில் ஷகீலா, ரித்திகா தமிழ் செல்வி, தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கனி திரு, அஸ்வின் குமார் உள்ளிட்ட மொத்தம் 12 பேர் கலந்துகொண்டனர். அதோடு இதில்தான் கோமாளிகளாக கலக்கப்போவது யாரு பாலா, ஷிவாங்கி, புகழ், மணிமேகலை, சுனிதா, உள்ளிட்ட சிலர் இருந்தனர். இதில் முதல் வெற்றியாளராக கனி திருவும், இரண்டாவதாக ஷகீலாவும் அறிவிக்கப்பட்டனர்.
பின்னர் தொடர்ந்து இதன் சீசன் 3 வெளியானது. அதில் ஸ்ருதிகா, அம்மு அபிராமி, வித்யூலேகா, மனோ பாலா, கிரேஸ் கருணாஸ், தர்ஷன் உள்ளிட்ட சிலர் பங்கேற்றனர். இதில் ஸ்ருதிகா முதல் வெற்றியாளராகவும், தர்ஷன் இரண்டாவது வெற்றியாளராவும் அறிவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்த இந்த சீசனை தொடர்ந்து இதன் அடுத்த சீசன் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் தற்போது இதன் அடுத்த சீஸனின் டீசர் வெளியாகியுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு வெளியான இதன் டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீசனில் புதிதாக டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்துவும் பங்கேற்கவுள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கவரப்பட்ட ஜி.பி.முத்துவும் இதில் பங்கேற்கவுள்ளதால் ரசிகர்களிடம் மேலும் எதிர்பார்ப்பை எட்டியுள்ளது விரைவில் வரவுள்ள குக்கு வித் கோமாளி சீசன் 4.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?