Cinema
'பஞ்சதந்திரம்' படத்தில் நடித்த பிரபல நடிகர் மரணம்.. இந்திய திரையுலகத்தினர் அதிர்ச்சி!
தெலுங்கு சினாவில் புகழ் பெற்ற நடிகராக வளம் வந்தவர் கைகலா சத்யநாராயணா. இவர் 750க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிகர் கமல்ஹாசனின் பஞ்சதந்திரம், சத்தியராஜ் நடித்த பெரியார் படத்திலும் கைகலா சத்யநாராயணா நடித்துள்ளார். நடிகராக மட்டும் இல்லாமல் பல படங்களைத் தயாரித்தும் வெளியிட்டுள்ளார்.
பின்னர் வயது மூப்பின் காரணமாக நடிப்பதைக் குறைத்துக் கொண்டார். இவர் கடைசியாக 2019ம் ஆண்டு வெளிவந்த மகேஷ்பாபுவின் 'மகரிஷி' படத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.
இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக நடிகர் கைகலா சத்ய நாராயணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இருப்பினும் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் கைகலா சத்யநாராயணா உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 87.
இதையடுத்து அவரது மறைவுக்கு நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமையன்று ஜூப்ளி ஹில்ஸில் உள்ள மகாபிரஸ்தானத்தில் நடைபெறவுள்ளது என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“ரயில் பயணிகளை சாலைக்கு துரத்தும் மோடி அரசு” : கட்டண உயர்வுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!
-
2026ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.20 அன்று தொடக்கம்! : சபாநாயகர் அப்பாவு தகவல்!
-
திருவண்ணாமலையில் “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025!” : முழு விவரம் உள்ளே!
-
“தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சி தோழர் நல்லகண்ணு ஐயா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
“தமிழில் ‘வணக்கம்’ சொன்னால் போதுமா?” : ஒன்றிய அரசைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!