Cinema
“பால் முகம் காணவே நான் தவித்தேன்..” -வெளியானது வாரிசின் #SoulOfVarisu : 1 மணி நேரத்தில் 1M பார்வையாளர்கள்
தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் கோடி கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். தமிழில் தவிர்க்க முடியாத திரை நட்சத்திரங்களில் இவரும் ஒருவராக இருக்கிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பீஸ்ட்' படம் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் ஹிட் கொடுத்தது.
இதையடுத்து தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' என்ற படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தமன் இசையில் உருவாகும் இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அந்த போஸ்டர் காப்பி அடிக்கப்பட்டதாக ஒரு கும்பல் விமர்சித்து வந்தது.
இருப்பினும் நெகட்டிவ் விமர்சனங்களை தள்ளி வைத்து விட்டு, படம் வெளியீட்டுக்கு ரசிகர்கள் பெரிதும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் விஜய் மற்றும் பாடகி மானசி குரலில் வெளியான 'ரஞ்சிதமே..' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து ஒரு வார காலமாக நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்த இப்பாடலை, அஜித்தின் துணிவு படத்தின் 'சில்லா சில்லா' பாடல் ஓவர் டேக் செய்தது. அதன்பின் வெளியான வாரிசின் இரண்டாம் பாடலான சிம்பு பாடிய 'தீ..' பாடல் வெளியிலாகி ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து நேற்றைய முன்தினம் துணிவின் இரண்டாம் பாடலான 'காசேதான் கடவுளடா..' பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் தற்போது வாரிசின் மூன்றாம் பாடலான 'Soul Of Varisu - அம்மா' பாடல் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதி, பாடகி சித்ரா பாடியுள்ள இப்பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
தற்போது துணிவு படத்தின் 'காசேதான் கடவுளோட..' பாடல் நம்பர் 1 ட்ரெண்டிங்கிலும், 'சில்லா சில்லா..' பாடல் ட்ரெண்டிங் 2-லும் இடம்பெற்றுள்ளது. 3-ம் இடத்தில் வாரிசின் 'தீ..' பாடலும், டாப் ட்ரெண்டிங்கில் 5-ம் இடத்தை வாரிசின் 'ரஞ்சிதமே..' பாடலும் இடம்பெற்றுள்ளது. 'ரஞ்சிதமே..' பாடல் சுமார் 101 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
Attendance போடுவதற்கு முன் வரலாறு தெரிந்து பேசவும்: மாணிக்கம் தாகூருக்கு கனிமொழி என்.வி.என்.சோமு பதிலடி!
-
“கைது செய்தே காலத்தை ஓட்டிவிடலாம் என்கிற மிதப்பில் இருக்கிறாரா முதலமைச்சர்?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு! - த.வெ.க அரசின் அலட்சியத்தால் தொடரும் அவதி!
-
“டெல்லி ஓனர்களின் பாணியில் அடக்குமுறையை ஏவும் த.வெ.க. அரசை வன்மையாக கண்டிக்கிறேன்!” : உதயநிதி ஸ்டாலின்!
-
“பாத்ரூம் கூட போகவிடல”.. போராட்டத்துக்கு கிளம்பிய மருத்துவ பணியாளர்கள்.. வீட்டு காவலில் அடைத்த தவெக அரசு!