Cinema
“A கார்த்திக் சுப்பராஜ் படம்” - தெறிக்க விடும் ராகவா vs SJ சூர்யா - வெளியானது 'ஜிகர்தண்டா 2 'டீசர் !
தமிழில் முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம்தான் ‘ஜிகர்தண்டா’. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படம், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் 10 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் வசூல் சுமார் 35 கோடி வரை பெற்றது. மதுரையில் இருக்கும் ரெளடி.. அவரது வாழ்க்கையை படமாக்க முயலும் இயக்குநர்.. கதாநாயகியின் காதலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ரெளடியின் வாழ்க்கை கதையை படமாக்குவாரா கதாநாயகன் என்ற கோணத்தில் கதை நகரும்.
மேலும் ஒவ்வொரு சீனிலும் விறுவிறுப்பாக ஆக்ஷன் கலந்த காமெடி நிறைந்த ஒன்றாக இருக்கும் இப்படத்தில், பாபி சிம்ஹா தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை கச்சிதமாக நடித்து அதற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். அதோடு பீட்சாவை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜின் 2-வது படமான இப்படம், அவருக்கு மீண்டும் ஒரு நல்ல பெயரையும் பெற்று தந்தது.
இப்படம் வெளியாகி இந்தாண்டுடன் 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதால், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விடியோ வெளியிட்டிருந்தார். அதில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகியுள்ளது. 'ஜிகர்தண்டா DOUBLEX' என்று பெயரிட்டிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் SJ சூர்யா நடித்துள்ளனர்.
கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பென்ஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, மீண்டும் சந்தோஷ் நாராயணனே இசையமைக்கிறார். இன்று (11.12.2022) மாலை 6 மணிக்கு வெளியான டீசர், தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Also Read
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !