Cinema

“திரை தீ பிடிக்கும்” குஷியான ரசிகர்கள்: 2022 ல் Google ல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 தமிழ் பட பட்டியல் இதோ!

ஒவ்வொரு ஆண்டும் முடியும் போது, அந்தாண்டில் சிறப்பு படைப்புகள் பட்டியல் வெளியிடப்படும். அப்படி முதலில் இருப்பது முடியப்போகும் ஆண்டிற்கான சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்குநர் என திரை சார்ந்து இருப்பதே ஏராளம்.

அந்த வகையில், இந்தாண்டு (2022) முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இந்தாண்டில் Google ல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 தமிழ் பட பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

2022-ல் Google ல் அதிகம் தேடப்பட்ட டாப் 10 தமிழ் பட பட்டியல் இதோ !

1. விக்ரம் -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான இப்படம் ரூ.420-500 கோடி வரை வசூல் சாதனை படைத்துள்ளது. இதன் ஓடிடி உரிமையை 'Disney+' கைப்பற்றியுள்ளது.

2. பொன்னியின் செல்வன் 1 -

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பார்த்திபன் என திரைபட்டாளமே நடித்திருக்கும் இந்த படம் சுமார் 500 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது.

3. பீஸ்ட் -

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான இப்படம், சுமார் ரூ.236.90 கோடி வசூலித்துள்ளது.

4. ராக்கெட்ரி - நம்பி விளைவு

மாதவன் இயக்கி நடித்த இப்படம் சுமார் 50 கோடி வரை வசூலித்துள்ளது. சில சர்ச்சைகளை கிளம்பினாலும் விமர்சன ரீதியாக வரவேற்கப்பட்டுள்ள இப்படத்தின் ஓடிடி உரிமையை 'Amazon Prime Video' கைப்பற்றியுள்ளது.

5. லவ் டுடே -

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த இப்படம் கடந்த மாதம் (நவம்பர்) வெளியானது. சுமார் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், தற்போது வரை சுமார் 70 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது. இன்னும் ஓரிரு திரையரங்குகளில் திரையிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஓடிடி உரிமையை 'Amazon Prime Video' கைப்பற்றியுள்ளது.

6. வலிமை -

எச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹுமா குரேஷி நடிப்பில் வெளியான இப்படம் ரூ.155.45 கோடி வசூலித்துள்ளது.

7. திருச்சிற்றம்பலம்

மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் நடிப்பில் திரையில் திரையிட்டபடம். இப்படம் ரூ. 110 கோடி வசூலித்துள்ளது இதன் ஓடிடி உரிமையை 'Sun NXT' கைப்பற்றியுள்ளது.

8. மகான் -

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன் நடிப்பில் வெளியான இப்படம் 'Amazon Prime Video' ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டது. கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றுள்ளது.

9. கோப்ரா

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் இருவேடங்களில் நடித்துள்ள இப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது. 100 கோடி பட்ஜெட்டிற்கு எடுக்கப்பட்ட இப்படம் வெறும் 40 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இப்படத்தின் 'Sony Liv' ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளது.

10. விருமன்.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடிப்பில் வெளியான இப்படம் குடும்ப திரைப்படமாக கருதப்பட்டது. சுமார் 60 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ள இப்படத்தின் ஓடிடி உரிமையை 'Amazon Prime Video' கைப்பற்றியுள்ளது.

Also Read: 2022 இந்திய அளவில் பிரபல நடிகர்கள் பட்டியல் வெளியானது: அட முதலிடத்தில் இவரா..? -தமிழ் ரசிகர்கள் உற்சாகம்!