Cinema
2022 இந்திய அளவில் பிரபல நடிகர்கள் பட்டியல் வெளியானது: அட முதலிடத்தில் இவரா..? -தமிழ் ரசிகர்கள் உற்சாகம்!
ஒவ்வொரு ஆண்டும் முடியும் போது, அந்தாண்டில் சிறப்பு படைப்புகள் பட்டியல் வெளியிடப்படும். அப்படி முதலில் இருப்பது முடியப்போகும் ஆண்டிற்கான சிறந்த நடிகர், நடிகை, படம், இயக்குநர் உள்ளிட்ட திரை சார்ந்து இருப்பதே ஏராளம்.
அந்த வகையில், இந்தாண்டு (2022) முடிய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இந்தாண்டிற்கான இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் பட்டியலை IMDb நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் முதலிடத்தில் நடிகர் தனுஷ் இடம்பிடித்துள்ளார். இதனால் தமிழ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். IMDb வெளியிட்ட டாப் 10 இந்திய பிரபலங்கள் பட்டியல் இதோ :-
1. தனுஷ்
2. ஆலியா பட்
3. ஐஸ்வர்யா ராய்
4. ராம் சரண்
5. சமந்தா
6. ஹிருத்திக் ரோஷன்
7. கியாரா அத்வானி
8. ஜூனியர் NTR
9. அல்லு அர்ஜுன்
10. யாஷ் - இந்த பட்டியல் வெளியானதையடுத்து ரசிகர்கள் பலரும் குஷியில் உள்ளனர்.
வெளியான இந்த டாப் 10 பட்டியலில் 6 பேர் தென்னிந்திய திரை நட்சத்திரங்கள் ஆவர். அதிலும் முதலிடத்தில் தனுஷ் இருக்கிறார். இவர் நடிப்பில் இந்தாண்டு மாறன், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் - ஆகிய 5 படங்கள் வெளியாகியுள்ளது.
இதில் 'தி கிரே மேன்' திரைப்படம் ஹாலிவுட் படமாகும். அதோடு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தனுஷ் நடிப்பில் 'அத்ராங்கி ரே' என்ற இந்தி படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இந்தாண்டு இந்திய அளவில் பிரபல நடிகர்கள் பட்டியலை பிரபல IMDb வெளியிட்டுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!