Cinema
பாகுபலிக்கு Propose செய்த பிரபல பாலிவுட் நடிகை.. அவரே கூறியதால் ஆச்சர்யத்தில் ரசிகர்கள் -யார் அந்த நடிகை?
தெலுங்கு நடிகரான பிரபாஸ், பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தெலுங்கு பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படம் மூலமே தெலுங்கை தாண்டி மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இந்த படம் பல்வேறு மொழிகளில் பெரிய ஹிட் கொடுத்து பிரபாஸுக்கு தனி ரசிகர் கூட்டத்தையே சேர்த்தது.
இதைத்தொடர்ந்து 'பாகுபலி 2' வந்த பிறகும் பெரிய மாஸ் ஹிட் கொடுத்து இந்தியிலும் பிரபலமானார். அதன்பிறகு இவரது நடிப்பில் தமிழில் வெளியான 'சாகோ' படம் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. மேலும் பூஜா ஹெக்டேவுடன் பிரபாஸ் நடித்த 'ராதே ஷியாம்' திரைப்படமும் பெரிய தோல்வியை சந்தித்தது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு எந்த படமும் கைக்கொடுக்காத நிலையில், தற்போது அவர் பாலிவுட்டில் களமிறங்கியுள்ளார்.
அதன்படி பிரபல 'இராமாயண' கதையை தழுவி பாலிவுட் பிரபல இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிரீத்தி சனோன், சைப் அலிகான் உள்ளிட்ட பலரும் நடிக்கும் 'ஆதி புருஷ்' படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள், நெட்டிசன்கள் மத்தியில் பெரும் நகைப்பை ஏற்படுத்தியதோடு, இதனை பெரிய கன்டென்டாகவும் மாற்றி கிண்டல் செய்து வந்தனர்.
இந்த நிலையில், இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருக்கும் கிரீத்தி சனோன், சமீபத்தில் பேட்டி சார்னு அளித்துள்ளார். அதில் ஆதி புருஷ் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், தனக்கும் பிரபாஸுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் திருமணம் பற்றி பேசிய அவர், வாய்ப்பு கிடைத்தால் பிரபாஸை திருமணம் செய்து கொள்ள தயார் எனவும் கிரீத்தி கூறியுள்ளார். முன்னதாக 'பேடியா' என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் வருண் தவான் மற்றும் நடிகை கிரீத்தி சனோன் கலந்துகொண்டனர். அப்போது கிரீத்தியும் பிரபாஸும் டேட்டிங் செய்து வருவதாக மறைமுகமாக வருண் தவான் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை கிரீத்தி சனோன் தனது விருப்பத்தை பொதுவெளியில் ஓப்பனாக தெரிவித்துள்ளது திரை வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த மாதம் 'ஆதிபுருஷ்' படத்தின் டீசர் வெளியீட்டின்போது, மேடையில் நின்றுகொண்டிருந்த பிரபாஸிடம் அருகே இருந்த கிரீத்தி பிரபாஸுக்கு வியர்க்கிறது என்று தனது துப்பட்டாவை கொடுத்ததாக புகைப்படங்கள் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!