Cinema
"போடு.. தகிட தகிட.." - கைதி 2 படத்தில் வில்லனாகும் பிரபல மாஸ் ஹீரோ.. வெளியான தகவலால் ரசிகர்கள் ஆரவாரம் !
கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல தமிழ் பட கதாநாயகன் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'கைதி'. கதாநாயகியை இல்லாமல் படம் முழுவதும் நகரும் இந்த படம் லோகேஷுக்கு முதல் படம். தனது முதல் படத்திலே அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய லோகேஷ், கைதி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என முதல் பக்கத்திலேயே காட்டியிருந்தார்.
இதையடுத்து விஜய் நடிப்பில் 'மாஸ்டர்', பின்னர் சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான 'விக்ரம்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த அனைத்து படங்களும் வெளியாகி மக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், கமல்ஹாசனுக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு 'விக்ரம்' படம் தான் வசூல் ரீதியாக பெரிய அளவு ஹிட் கொடுத்த படமாக இருக்கிறது.
இதையடுத்து மீண்டும் நடிகர் விஜயின் 67-வது படத்தை லோகேஷ் இயக்குவுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கெளதம் மேனன், விஷால், நிவின் பாலி, மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகாத நிலையில் ரசிகர்கள் இட்னஹ் படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர்.
மேலும் விக்ரம் படத்தின் இறுதியில், விக்ரம் 2 படத்தில் வில்லனாக சூர்யா நடிக்கவுள்ளதாக விக்ரம் படத்தின் இறுதியிலே காட்டப்பட்டிருக்கும். முதல் முறையாக நடிகர் சூர்யா முழு வில்லனாக 'ரோலக்ஸ்' என்ற கதாபாத்திரம் வழியாக களமிறங்கப்போகும் இந்த படத்திற்கும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது 'கைதி 2' படம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கார்த்தி கதாநாயகனாக இருக்கும் இந்த படத்தில் வில்லனாக யார் நடிப்பார் என்று எதிர்பாத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவே திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அதோடு சூர்யாவின் ரோலக்ஸ் கதாப்பாத்திரத்திற்கு இணையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
பொதுவாகவே லோகேஷ் யுனிவெர்சில் ஹீரோ கதாபாத்திரத்துக்கு எந்த அளவு முக்கியதத்துவம் இருக்குமோ, அதே அளவு வில்லன்களுக்கு இருக்கும். விஜய் சேதுபதி, சூர்யா என்ற வரிசையில் தற்போது ராகவா லாரன்ஸ் இணைவாரா என்று ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!