Cinema
3 கிலோ எடை கொண்ட நகையை அணிந்துகொண்ட பிரபல தமிழ் பட நடிகரின் மனைவி.. வைரலாகும் புகைப்படம் !
தமிழ் சினிமாவின் நட்சத்திரமாக இருந்த நடிகர் நகுல், படம், பாட்டு என்பதை தாண்டி தற்போது ரியாலிட்டி ஷோ வில் நடுவராக இருக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு ரியாலிட்டி ஷோவிற்கு நடுவராக இருக்கிறார்.
இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு சுருதி என்பவருடன் திருமணமாகி ஏற்கனவே ஒரு குழந்தை இருக்கும் நிலையில், அண்மையில் மற்றொரு குழந்தையும் பிறந்தது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தனது அன்றாட வாழ்க்கை குறித்தும், தனது குடும்ப வாழ்க்கை குறித்தும் சமூக வலைதளங்களில் வீடியோ, புகைப்படங்களை பதிவேற்றுவார்.
இந்த நிலையில், நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் முன்னணி ஆபரண நிறுவனமான போத்தீஸ் ஸ்வர்ணா மஹால், "பிரைடல் தங்க நகை" விருதை வென்றது.
தொடர்ச்சியாக இரண்டு விருதுகளை வென்ற தென்னிந்தியாவில் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் இந்த ஆண்டும் விருதை பெரும் நோக்கத்தோடு, உலகளவில் தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோவில் வடிவத்தில் 3 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவிலை புகைப்படம் எடுக்க அனுமதியில்லை என்பதால், போத்தீஸ் ஸ்வர்ண மஹாலை கைவினைஞர்களின் குழுவினர் கோவில் வளாகத்தில் தங்கி, கோவிலுக்குள் இருக்கும் ஒவ்வொரு சிற்பத்தின் நுணுக்கமான கையால் வரைந்து புகழ்பெற்ற தலைசிறந்த படைப்பை உருவாக்கி உள்ளனர்.
இந்த நகையை நகுலின் மனைவி சுருதி தனது கழுத்தில் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!