Cinema
“RIP கார்ட் போடலாம்னு நினைச்சீங்களா..எங்களுக்கு எண்டே கிடையாது”-CARTOON NETWORK பதிலால் 90'S கிட்ஸ் குஷி!
கார்ட்டூன் என்ற உலகத்தை 90ஸ், 2k கிட்ஸ்களுக்கு அறிமுகம் செய்தது கார்ட்மூன் நெட்வொர்க் சேனல்தான். அதிலும் 90ஸ் கிட்ஸ்களை கார்டூன் பைத்தியமாக்கியதும் இந்த சேனல்தான்.இப்போது சிறுவர்களை செல்போனில் பலவிதமான கார்டூன்களை பார்க்கிறார்கள். அதுவும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். ஆனால் 90ஸ் கிட்ஸ்களின் காலத்தில் அப்படி இல்லை.
வீட்டில் இருந்த ஒரே டி.வி பெட்டியில் எந்த நேரத்தில் எந்த கார்ட்டூன் வரும் என்பதை அறிந்து, அதைபார்க்க சண்டை கட்டிக் கொண்டு ஓடி ஓடி ஸ்கூபி-டூவையும், டாம் அண்ட் ஜெர்ரியையும் பார்த்த காலம் அது. இப்போது இந்த கார்ட்டூன் தொடர்களை யாராலும் மறக்க முடியாது.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த உடன் முதலில் கார்டூன்சேனை பார்த்து வளர்ந்த கூட்டம் தான் இந்த 90ஸ் கிட்ஸ். அதன் நீட்சிகள் தான் 2k கிட்ஸ் எல்லாம். இதன்பிறகு சுட்டி வீடி போன்ற பல கார்டூன் சேனல்கள் வரதொடங்கியது. தற்போது நிறைய கார்டூன் சேனல்கள் தொலைக்காட்சிகளில் உள்ளது. ஆனால் அப்போதும் சரி இப்போதும் சரி ஆல் டைம் பேவரைட் என்றால் அது கார்டூன் நெட்வொர்க் சேனல்தான்.
இப்படி 30 ஆண்டுகளாக கார்டூன் உலகத்தில் கொடிகட்டி பறந்து வரும் கார்டூன் நெட்வொர்க் சேனல் தனது சேவையை நிறுத்திக் கொள்ளப்போவதாகத் தகவல் வெளியானது. இதனால் 90'ஸ் கிட்ஸ் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் இந்த தகவலுக்கு கார்டூன் நெட்வொர்க் சேனல் விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ''நாங்கள் இன்னும் இறக்கவில்லை. எங்களுக்கு வெறும் 30 வயது தான் ஆகிறது.
நாங்கள் எங்கும் செல்லப் போவதில்லை. பிரியமான, புதுமையான கார்ட்டூன்களாக உங்கள் இல்லங்களில் நாங்கள் இருந்தோம், எப்போதும் இருப்போம். மேலும் விரைவில்!" என்று கூறப்பட்டுள்ளது. இந்த தகவல் 90'ஸ் கிட்ஸ் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!