Cinema
நடிகர் விஷால் வீட்டின் கண்ணாடி உடைப்பு விவகாரம் : சிக்கிய மர்ம கும்பல் கொடுத்த பகீர் வாக்குமூலம் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஷால். மேலும் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளராகவும் நடிகர் விஷால் உள்ளார். இவர் சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் காரில் வந்த மர்ம நபர் நபர்கள் நடிகர் விஷால் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து நடிகர் விஷால் சார்பாக மேலாளர் ஹரி கிரிஷ்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், "நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார், நேற்று (26/09/2022) இரவு சிவப்பு நிற காரில் வந்த சிலர் நடிகர் விஷால் வீட்டினை கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர்.
இதில், விஷாலின் வீட்டு கண்ணாடிகள் சேதமாகியுள்ளன, இவை அனைத்தும் விஷால் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதையும் இந்த புகாரில் இணைத்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இது சம்மந்தமாக காரின் எண்ணை வைத்து 4 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள், கொளத்தூரை சேர்ந்த பிரவீன் குமார், ராஜேஷ் மற்றும் ஹோட்டல் நடத்தி வரும் அண்ணா நகரை சேர்ந்த சபரீஸ்வரன், புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிவில் என்ஜினியர் மணிரத்னம் என்பது தெரியவந்தது.
மேலும் நண்பர்களான இவர்கள், சம்பவம் நடந்த நாளன்று ஒன்றாக சென்று மது அருந்திவிட்டு, போதையில் காரில் வந்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறத்தொடங்கியபோது அங்கிருந்த கற்களை எடுத்து ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர்.
அந்த தாக்குதலில் எதிர்பாராதவிதமாக நடிகர் விஷால் வீட்டின் கண்ணாடி மீது கற்கள் விழுந்துவிட்டதாக அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இதையடுத்து இவர்கள் வாக்குமூலம் உண்மையா என்பது குறித்து அதிகாரிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Also Read
-
உலகம் உங்கள் கையில் : மாணவர்களுக்காக 40 அரங்குகளுடன் தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கம்.. எங்கு? - விவரம்!
-
விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பயன்பாடு தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
சாத்தான் வேதம் ஓதும் அமித்ஷா; ஊழலைப் பற்றி என்ன அருகதை இருக்கிறது? : செல்வப்பெருந்தகை கண்டனம்!
-
ஐ.நா. பெண்கள் அமைப்புக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்... விவரம் என்ன?
-
வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொள்ளும் தமிழிசை.. அன்று பால்.. இன்று HCL.. கலாய்க்கும் இணையவாசிகள் - விவரம்!