Cinema
கேரளாவில் சிறந்த நடிகை விருதை பெரும் தமிழ்நாட்டை சேர்ந்த திருநங்கை.. குவியும் பாராட்டு !
கேரளா மாநிலத்தில் ஆண்டுதோறும் திரைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக கேரள திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு நடைபெறவிருக்கும் 52-வது கேரள திரைப்பட விருதுகள் வழங்கும் விழா வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் தமிழ்நாட்டை சேர்ந்த திருநங்கை நேகா என்பவருக்கு விருது வழங்கி கெளரவிக்கவுள்ளது. இந்தாண்டு மலையாள திரையுலகில் வெளியான சென்னையை சேர்ந்த நேகா என்ற திருநங்கை, நட்சத்திரா மனோஜ், கண்ணன் நாயர் ஆகியோர் நடிப்பில், இயக்குநர் அபிஜித் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் 'அந்தரம்'.
இந்த படத்தில் திருநங்கைகளின் வாழ்க்கை குறித்தும், அவர்கள் கஷ்டத்தை குறித்தும் வேறொரு கண்ணோட்டத்தில் எடுத்துரைக்கிறது. பல்வேறு மொழிகளில் திருநங்கைகளைப் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும், 'அந்தரம்' திரைப்படம் வித்தியாசமாக இருப்பதாக திரை ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது திருநங்கைகளின் குடும்பம் மற்றும் சமூக-அரசியல் பின்னணியில் அதன் லென்ஸைப் பயிற்றுவிக்கும் வகையில் இருக்கும் இந்த படம் தற்போது விருதுகள் பெற்றுள்ளது.
இந்த நிலையில் தற்போது நடைபெறவிருக்கும் 2-வது கேரள திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 'அந்தரம்' திரைப்படத்திற்கான சிறந்த சிறந்த நடிப்பிற்காக திருநங்கையருக்கான சிறப்புப் பிரிவு விருதுக்கு திருநங்கை நேகா தேர்வாகியுள்ளார். இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தனது கடும் உழைப்பினாலும் தேடலினாலும் சாதித்துள்ள நேஹா, பலருக்கு எடுத்துக்காட்டாகவும், ஊக்கமாகவும் திகழ வாழ்த்துகிறேன்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Also Read
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!
-
தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா இதுதானா? : தனது அனுபவத்தை பகிர்ந்து குற்றம்சாட்டிய தயாநிதி மாறன் MP!