Cinema
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பாரதிராஜா.. நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. பல படங்கள் இயக்கி தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழ்ந்த அவர் தற்போது வயது முதிர்வின் காரணமாகப் படங்கள் இயக்குவதை விட்டுவிட்டு, படங்களில் நடித்து வருகிறார்.
அவருக்கு திடீரென அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து அவர் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பாரதிராஜாவின் நடல் நலம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தார். முன்னதாக, இயக்குநர் பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தியறிந்து முதலமைச்சர், பாரதிராஜாவின் மனைவியை தொலைபேசி வாயிலாக தொடர்புக் கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார்.
தற்போது பாரதிராஜா நலம் பெற்று இல்லம் திரும்பியதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து, நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது அமைச்சர் கே.என்.நேரு, கவிப்பேரரசு வைரமுத்து, பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!