Cinema
சுரேஷ் சந்திராவின் உதவியாளரை தாக்கிய பவுன்சர்கள்: "பொன்னியின் செல்வன்" இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு!
மணிரத்தினம் இயக்கத்தில், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், பிரபு, கார்த்தி, த்ரிஷா என பெரிய திரைப்பட்டாளமே நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் தான் 'பொன்னியின் செல்வன்'. தமிழ் ரசிகர்கள் வெகு ஆவலுடன் காத்திருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
இதையடுத்து இன்று 'பொன்னியின் செல்வன்' இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
அதேபோல் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட பலரும் வருகை தந்துள்ளனர். மேலும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஆகியோரும் பங்கேற்றுள்ளார். மேலும் இந்த விழாவைக் காண ரசிகர்களும் குவிந்துள்ளனர். மிகப் பிரம்மாண்டமாக மேடை அமைக்கப்பட்டு இந்த இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், "பொன்னியின் செல்வன்" நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சுரேஷ் சந்திரா பி.ஆர்.ஓ. வின் உதவியாளரான விக்கி என்பவர் வந்துள்ளார். அப்போது அங்கிருந்த பவுன்சர்கள் அவரை தாக்கினார்கள். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“தமிழ்நாடு இரத்ததானத்தில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது!” : தேசிய இரத்த தான நாளில் அமைச்சர் மா.சு பேச்சு!
-
“10,000 கிராமங்களைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!” : ககன்தீப் சிங் தகவல்!
-
நமக்காக தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்!
-
சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட திட்டம் - நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் : ரூ.250.47 கோடி ஒப்பந்தம்!
-
அமைச்சர் பதவியை பறிக்கும் மசோதா : ஒன்றிய அரசின் திட்டத்திற்கு செக் வைத்த இந்தியா கூட்டணி!