Cinema
100 கோடியில் இருந்து 20 கோடிக்கு போன பிரபல பாலிவுட் நடிகரின் சம்பளம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் : காரணம் ?
பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார், 1981-ல் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு பல்வேறு படங்களில் நடிகராக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர், தனது ஒரு படத்தினுடைய சம்பளத்தையும் கோடியில் மாற்றினார்.
அக்ஷய் குமார் நடித்தாலே அந்த படம் ஹிட் தான் என்று இருந்து வந்த நிலை, அண்மை காலமாக மாறியுள்ளது. அவரது நடிப்பில் அண்மையில் வெளியான அனைத்து படங்களும் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், அவர் மட்டுமின்றி அவரது ரசிகர்களும் வேதனையில் உள்ளனர்.
இயக்குநர் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பில் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவான 'எந்திரன் 2.0'-ல் பட்சிராஜன் கதாபாத்திரத்தில் நடித்தது மூலம் தமிழ் திரையில் தோன்றினார். இவரது முதல் தமிழ் படமே இவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இருப்பினும் பாலிவுட்டில் இவரது மவுசு குறையாமல் காணப்பட்டது.
இந்த நிலையில், அண்மையில் வெளியான 'அத்ராங்கி ரே' திரைப்படம் இந்தி ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் மற்ற திரை ரசிகர்களை கவர தவறி விட்டது. இதையடுத்து டெல்லி மன்னன் பிரித்திவிராஜ் சவுகான் கதையை தழுவி எடுக்கப்பட்ட 'சாம்ராட் பிரித்திவிராஜ்' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியை தழுவியது.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ராய் இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியான 'ரக்ஷாபந்தன்' படமும் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அடைந்தது. இதனால் மிகவும் அதிருப்தியில் இருக்கும் நடிகர் அக்ஷய் குமார் தனது சம்பளத்தை 5 மடங்கு குறைத்திருக்கிறார்.
அதாவது தற்போது வரை 100 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் இவர், 20 கோடி வரை குறைத்திருக்கிறார். இதனால் தயாரிப்பாளர்கள் பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தமிழில் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்த 'ராட்சன்' படத்தை இந்தியில் 'கட்புட்லி' என்ற பெயரில் அக்ஷய் குமார், ராகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ott-யில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவின் போது, பாலிவுட் பட தோல்விக்கு 'நாங்கள் தான் காரணம்.. நான் தான் காரணம் நான் மாற்றங்களைச் செய்ய வேண்டும், பார்வையாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு என்னைத் தவிர வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது" என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!
-
“அரசமைப்பு திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல; சர்வாதிகாரத்தின் தொடக்கம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி” : நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி அ.மணி கோரிக்கை!