Cinema
'தல்லுமாலா' திரைப்படம்.. டொவினோ தாமஸ் - மோகன்லால் ரசிகர்களிடையே மோதல்? - பின்னணி என்ன ?
நடிகர் டொவினோ தாமஸ்,கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தான் 'தல்லுமாலா'. இப்படம் நேற்று கேரள மாநிலத்தில் உள்ள திரையரங்கில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் திரையரங்குகளில் வெளியான 'தல்லுமாலா' திரைப்படத்தை காண ரசிகர்கள் குவிந்தனர். அப்போது அங்கு வந்த நடிகர் மோகன்லால் ரசிகர்கள், தல்லுமாலா படம் நன்றாக இல்லை என்று கூறியதால் இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டதாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ஆனால் மோகன்லால் ரசிகர் தரப்பினர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும் எங்களில் யாரும் அப்படி செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த வீடியோ ஏதோ பள்ளி மாணவ கும்பலுக்கிடையே ஏற்பட்ட தகராறு என்றும், அந்த வீடியோவை பகிர்ந்து இப்படி சித்தரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கேரளா திரை ரசிகர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
5 பத்திரியாளர்களை கொலை செய்த இஸ்ரேல்... மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய கொடூரம் !
-
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் திருப்பூர்... பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருப்பூர் MP கடிதம்
-
நீலக்கொடி சான்றிதழ் பெற அழகுபடுத்தப்படும் தமிழ்நாட்டின் 6 கடற்கரைகள்: ரூ.24 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
-
“இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! ஜனநாயகம் தழைக்கும்!”: பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
-
வாக்கு திருட்டு - பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!