Cinema

“கல்யாணம் வாழ்க்கை வீணா போனதுக்கு நீங்க தான் காரணம்” : பாலிவுட் இயக்குநரை குற்றம்சாட்டிய சமந்தா !

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவருக்கும் தெலுங்கு திரை நட்சத்திரமான நாக சைதன்யாவுக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. சில மனக்கசப்புகள் காரணாமாக இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2021 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

இதையடுத்து இருவரும் அவர்களது தனித்தனி வாழ்க்கையில் சினிமா, சீரிஸ் என்று மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியில் வெளியான 'The Family Man' சீரிஸின் மூலம் பாலிவுட்டில் சமந்தா மிகவும் பிரபலமானார் . இவர்களின் விவாகரத்திற்கு இந்த சீரிஸும் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.

தொடர்ந்து அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' திரைப்படத்தில் "ஊ சொல்றியா மாமா" என்ற பாடலில் நடித்ததன் மூலமாக இளைஞர்களின் மனதை மேலும் கொள்ளைக்கொண்டார். அதோடு 'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம் வெற்றியை தொடர்ந்து, தற்போது தமிழ், தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இவர், தனியார் மீடியா ஒன்றிற்கு பேட்டியளித்த போது, திருமண வாழ்க்கை பற்றி பகிர்ந்துள்ளார்.

அதாவது தமிழில் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான 'Coffee With DD' என்ற நிகழ்ச்சி போன்று, இந்தியில் 'Coffee With Karan' என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. பாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளரும், இயக்குநருமான கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் 7-வது சீசன், வரும் ஜூலை 7 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில், இதன் டீசரை அந்த குழு வெளியிட்டுள்ளது. அதில், கரண் ஜோகர் திருமண வாழ்க்கை குறித்து கேள்வி கேட்கையில், அதற்கு சமந்தா, "மகிழ்ச்சியற்ற திருமண வாழ்க்கைக்கு நீங்கள் தான் காரணம்" என்று காட்டமாக பேசியுள்ளார்.

மேலும் "திருமணம் வாழ்க்கையை நீங்கள் K3G என்று சொல்கிறீர்கள்.. ஆனால் உண்மையில் அது KGF" என்று கோபமாக கூறியுள்ளார். இந்த விவகாரம் தற்போது சினி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read: AIIMS செங்கல்.. நீட் போராட்டம்.. சட்டப்பேரவை சம்பங்கள் : இளைஞரணி செயலாளராக 4வது ஆண்டில் உதயநிதி ஸ்டாலின்!