Cinema
விஷாலின் காலில் பலத்த அடி.. மீண்டும் ரத்தான 'லத்தி' படப்பிடிப்பு.. ரசிகர்கள் சோகம் !
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். 'நானும் மதுர காரன் தான் டா' என்ற வசனம் மூலம் மக்களை வசிய படுத்திய இவருக்கு, ரசிகர்களும் ஏராளம். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படங்களான சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும் கணிசமான வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து ரமணா, நந்தா ஆகியோர் இணைந்து ரமணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் படம் தான் 'லத்தி'. இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஷூட்டிங் ஐதராபாத்தில் நடைபெற்றபோது, விஷாலின் கையில் காயம் ஏற்பட்டது.
இதனால் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டு கேரளாவில் சிகிச்சைப் பெற்று வந்தார். தற்போது இவருக்கு உடல்நிலை தேறிய நிலையில், மீண்டும் இதன் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அப்போது படத்தின் மற்றொரு சண்டை காட்சி படமாக்கப்பட்டபோது, நடிகர் விஷாலின் காலில் நிஜமாகவே அடி விழுந்துள்ளது. இதனால் அவர் துடிதுடித்து கீழே விழ, அருகிலிருந்த படக்குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்தனர்.
படப்பிடிப்பின் போது மீண்டும் எதிர்பாரா விதமாக விஷாலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் 'லத்தி' படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!