Cinema
வளைகாப்புக்கு வந்தவர்களுக்கு Kerchief-ஐ பரிசாக அளித்த சோனம் கபூர்.. Kerchief-ல் என்ன இருந்தது தெரியுமா?
பாலிவுட்டின் பிரபல நடிகையான சோனம் கபூர், கடந்த 2018-ஆம் ஆண்டு தொழிலதிபர் ஆனந்த் அஹூஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படத்தில் பிஸியாக நடித்து வந்த இவர், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். மேலும் அவ்வப்போது தனது சமூக ஊடங்களில் தன்னை குறித்தும் தனது கணவரை குறித்தும் அப்டேட் செய்வார்.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதோடு அண்மையில், தான் கர்ப்பமாக இருந்த போதிலும், பேபிமூனுக்காக' இத்தாலியின் புளோரன்ஸ் நகருக்கு சென்றதாகவும் பதிவிட்டிருந்தார். அதோடு இது தனது முதல் குழந்தை என்பதால், கணவர் ஆனந்த் அஹூஜாவுடன் தனது வளைகாப்பு விழாவை லண்டனில் கொண்டாடினார்.
அந்த விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு சோனம் கபூர், ஆனந்த் அஹூஜா தம்பதியினர் இன்ப அதிர்ச்சி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு ஒரு கைக்குட்டையும், பையும் பரிசாக கொடுக்கப்பட்டது.
அந்த கைக்குட்டையில் விருந்தினர்களின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி அதில் அந்த பையில் ஒரு செயினும் இருந்தது. அந்த செயினில் விருந்தினர்களின் பெயர் எழுதப்பட்டிருந்தது. இதை கண்ட விருந்தினர்கள் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
“சிபிஐ விசாரிக்கப்பட வேண்டிய முதல் நபர் விஜய்தான்” - ‘தி இந்து’ தலையங்கத்தை மேற்கோள் காட்டிய ‘முரசொலி’!
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!