Cinema
“வலிமை திரைப்படம் காப்பி?” : படக்குழுவினருக்கு சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு!
மெட்ரோ படத்தின் கதை, கதாபாத்திரங்களை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக கூறி, ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, ‘வலிமை’ பட தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் ஹெச்.வினோத் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வலிமை’ திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், தங்களின் ‘மெட்ரோ’ படத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்தப் படத்தை தயாரித்த ஜே.கே.கிரியேஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெயகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
‘மெட்ரோ’ படத்தில் வசதியான வாழ்வுக்காக, சங்கிலி பறிப்பு, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்துகொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போல காட்சிப்படுத்தப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ படத்தை இந்தி உள்ளிட்ட பிற மொழிகளில் தயாரிக்க உள்ள நிலையில், அதே கதை, கதாபாத்திரங்களுடன் படமாக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது என்பதால், வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓடிடி தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, மார்ச் 17ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதிலளிக்கும்படி, ‘வலிமை’ பட தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குனர் ஹெச்.வினோத் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
வெற்றிப் பயணத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை ஏன் மறுதலிக்கிறீர்கள்? இதற்கு பெயர் பாகுபாடு : தீபக்நாதன்!
-
கல்லுரி மாணவிக்கு பாலியல் சீண்டல் : த.வெ.க நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை!
-
தூயசக்தி விஜய் ஏன் மெளனமாக இருக்கிறார்? : போதைக் கும்பலுக்கு துணிச்சலைக் கொடுத்தது யார்? - முரசொலி!
-
மீண்டும் மீண்டுமா.. பாதியிலேயே நின்ற அரசுப் பேருந்து ? லோடு ஆட்டோவில் கயிறு கட்டி இழுத்து செல்லும் அவலம்!
-
வெளியானது 2027-ஆம் ஆண்டு அரசு விடுமுறைப் பட்டியல்.. இத்தனையும் சனி, ஞாயிறா? : முழுப் பட்டியல் உள்ளே!