Cinema
“இது விவாகரத்தே இல்லை; எல்லா குடும்பத்துலயும் இருக்குறதுதான்” - தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா விளக்கம்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் இந்திய சினிமாவின் குறிப்பிடத்தகுந்த ஹீரோவாகவும் இருக்கும் நடிகர் தனுஷின் சொந்த வாழ்வு குறித்து அவரே அறிக்கை வெளியிட்டது கடந்த இரண்டு நாட்களாக அனைத்து சமூக வலைதளங்களிலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
18 ஆண்டுகளாக கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த இருவரும் தனித்து வாழ முடிவெடுத்திருப்பதாக தனுஷும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.
இது கோலிவுட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா இது குறித்து விளக்கமளித்திருக்கிறார்.
இது தொடர்பான பேட்டியில், “தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே வழக்கமாக நடைபெறும் குடும்ப சண்டைதான். கருத்து வேறுபாடு காரணமாக வந்த சண்டைதான். விவாகரத்து இல்லை. இருவரும் ஐதராபாத்தில்தான் தங்கியிருக்கிறார்கள். இருவரிடமும் போனில் பேசி அறிவுரைகளை வழங்கியிருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
இதனிடையே தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்துக்கொண்டு பிரியவில்லை. தனுஷுக்கு கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருவதால் வருடத்துக்கு ஒன்றோ அல்லது இரண்டு முறைதான் மனைவி மற்றும் குழந்தைகளை காணும் சூழல் உள்ளது. எனவே எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு இருவரும் மீண்டும் இணைவார்கள் என்றும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!