Cinema

”வெளியே வந்ததும் இதைதான் கண்டிப்பா செய்வேன்” - சிறையில் ஆர்யன் கான் கூறியது என்ன?

எம்பிரஸ் என்ற சொகுசுக் கப்பல் மூலம் மும்பையில் இருந்து கோவைக்குச் சென்ற போது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடப்பதாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலிஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலிஸாரும் இந்த கப்பலில் ரகசியமாகப் பயணம் மேற்கொண்டனர். கப்பல் நடுக்கடலை நெருங்கியபோது தடை செய்யப்பட்ட கொக்கைன், ஹஷிஷ், எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப் பொருட்களை சுற்றுலா பயணிகள் பயன்படுத்துவது உறுதிபடுத்தப்பட்டது.

உடனே சொகுசுக் கப்பலில் வைத்தே போலிஸார் இவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் பலரும் சினிமா, ஃபேஷன் துறைகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. மேலும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டவர்களில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் இருந்துள்ளார்.

பின்னர், சொகுசுக் கப்பல் கோவாவுக்குச் செல்லாமல் மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது. இதனையடுத்து ஷாருக்கின் மகன் ஆர்யன் கான் உட்பட பலரிடம் அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்யன் கான் தரப்பில் இருந்து ஜாமின் கேட்டு வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 20ம் தேதிக்கு தள்ளிப்போனது.

இந்நிலையில், என்.சி.பி. அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் ஆர்யன் கான் உள்ளார். அப்போது, நான் விடுதலை ஆனதும் ஏழை எளிய மக்களின் உதவி செய்யப்போகிறேன். அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுவேன். எனது பெயரை கெடுத்துக்கொள்ளும் வகையில் எதிர்காலத்தில் எதையும் செய்ய மாட்டேன். அனைவரும் பெருமைப்படும் வகையில் இருப்பேன் என உறுதியளித்திருப்பதாக விசாரணை அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: லைம் லைட்டில் இருக்கும் போதே வெப் சீரிஸுக்கு தாவிய த்ரிஷா : இன்ஸ்டாவில் அறிவிப்பு; ரசிகர்கள் ஷாக்!