சினிமா

லைம் லைட்டில் இருக்கும் போதே வெப் சீரிஸுக்கு தாவிய த்ரிஷா : இன்ஸ்டாவில் அறிவிப்பு; ரசிகர்கள் ஷாக்!

வெப் சீரிஸில் நடிக்கப்போவதாக நடிகை த்ரிஷாவே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஏற்படுத்தியுள்ளார்.

லைம் லைட்டில் இருக்கும் போதே வெப் சீரிஸுக்கு தாவிய த்ரிஷா : இன்ஸ்டாவில் அறிவிப்பு; ரசிகர்கள் ஷாக்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ், தெலுங்கு என 18 ஆண்டுகளாக திரை உலகில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் த்ரிஷா.

தற்போது சதுரங்க வேட்டை 2, ராங்கி, கர்ஜனை போன்ற படங்களில் நடித்து முடித்துள்ள நடிகை த்ரிஷா கைவசமாக மோகன்லாலுடனான ‘ராம்’படம்தான் உள்ளது. இதனிடையே மணிரத்னம் இயக்கத்திலான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள த்ரிஷா அதற்கான டப்பிங் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா அறிவித்துள்ளார். தெலுங்கில் உருவாகி மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட இருக்கும் பிருந்தா என்ற வெப் தொடர் சோனி லைவ் தளத்தில் வெளியாக இருக்கிறது.

சுமார் 8 எபிசோட்களை கொண்டு உருவாக்கப்பட உள்ள இந்த சீரிஸை புதுமுக இயக்குநர் சூர்யா வாங்காலா இயக்கவிருக்கிறார். இந்த அறிவிப்பு தொடர்பான ட்வீட்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் முன்னணி கதாநாயகியாக இருக்கும் வேளையில் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தால் வெப் சீரிஸில் நடிக்க த்ரிஷா ஒப்புக்கொண்டிருக்கிறாரா எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், வெப் தொடர்களுக்கு அண்மைக்காலங்களாக சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வரும் வேளையில் த்ரிஷாவே அதில் நடிப்பது அந்த சீரிஸ் மீதான ஆவலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவரது ரசிகர்கள் தரப்பு தெரிவிக்கிறது.

banner

Related Stories

Related Stories