Cinema
ஷூட்டிங் தொடங்கும் முன்பே தடைப்பட்ட ஃபகத், நயன் படம்? - வேறு கதைக்கு தாவிய பிரேமம் பட இயக்குநர்!
கோலிவுட் சினிமாவின் முன்னணி நாயகியாக இருக்கும் நயன்தாரா, மலையாளம், தெலுங்கு என மற்ற தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து அங்கேயும் அவரின் மார்கெட் சீராக வைத்திருக்கிறார்.
தற்போது மலையாளத்தில் ஃபகத் பாசில் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கும் படம் ‘பாட்டு’. பிரபல மலையாள இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கவிருக்கும் இந்த படம் நல்ல காதல் கதையாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அல்போன்ஸ் புத்திரன் இசையமைக்கவும் உள்ளார்.
அவர் இசையமைப்பாளராக அறிமுகமாகவிருக்கும் முதல் படத்திலேயே மொத்தம் 11 விதமான பாடல்கள் இடம்பெற இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டே தொடங்க வேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக படப்பிடிப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டது.
இதனிடையே ஃபகத் பாசில் மற்றும் நயன்தாராவும் மற்ற படங்களில் பிஸியானதால் அல்போன்ஸ் புத்திரனும் தனது அடுத்த படத்திற்கான வேலையை துவங்கிவிட்டார். இந்த கதையில் ப்ரித்வி ராஜ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார்.
‘கோல்ட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் ‘பாட்டு’ படத்திற்கு முன்னதாகவே துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“இது நூல் அல்ல, நமது போர் ஆயுதம்”: ப.திருமாவேலன் எழுதிய மூன்று நூல்கள் வெளியீட்டு விழாவில் கி.வீரமணி உரை!
-
“நமது ஆட்சியின் Diary ; எதிரிகளுக்கு பதில் சொல்லும் நூல்கள்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள் : ஜன.14 ஆம் தேதி தொடங்கிறது சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!