Cinema
”நெட்டிசன்களின் ஃபேவரைட்டானா டான்சிங் ரோஸ்; ரொம்ப சந்தோஷமா இருக்கு” - யார் இந்த ஷபீர் ?
அமேசான் ப்ரைமில் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் சிறகடித்து பறந்து வருகிறது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை படத்தின் விமர்சனங்களும் நெட்டிசன்களின் கருத்துகளும். ஆர்யா, பசுபதி உட்பட அனைவரது நடிப்பும் அசத்தலாக இருந்தாலும் சில நிமிடங்களே திரையில் தோன்றி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கும் கதாப்பாத்திரம்தான் டான்சிங் ரோஸ். வந்த சில நிமிட காட்சிகளிலேயே ஆர்யாவை பின்னுக்குத்தள்ளி தனது நடிப்புத் திறமையை நிலையிருத்தியிருக்கிறார் டான்சிங் ரோஸ்.
இந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தவர் ஷபீர் கல்லரக்கல். கேரளாவைச் சேர்ந்த இவர் நாடக கலைஞராக துறைக்குள் நுழைந்து கடந்த 2014ம் ஆண்டு வெளியான நெருங்கிவா முத்தமிடாதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார். அதன் பின்னர் 2017ல் கருப்பு ராஜா வெள்ளை ராஜா, 2018ல் ஜெயம் ரவியின் அடங்கமறு, 2019ல் ரஜினியின் பேட்ட போன்ற பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் ஷபீர் நடித்திருந்தாலும் அவருக்கான முத்திரையை ஷபீருக்கு சார்பட்டா படத்தில் இடம்பெற்ற டான்சிங் ரோஸ் கதாப்பாத்திரம் பெற்றுத் தந்திருக்கிறது.
உதவி இயக்குநர் ஒருவரின் மூலம் சார்பட்டாவில் நடிக்கும் வாய்ப்பை ஷபீருக்கு அடங்கமறு பட ஷூட்டிங்கின் போது கிட்டியிருக்கிறது. ஆனால் வேறொரு படத்தில் நடிக்க கமிட்டானதால் முதலில் சார்பட்டாவில் நடிக்க ஷபீர் மறுத்திருக்கிறார். பின்னர் பா.ரஞ்சித் அழைத்து டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தின் அம்சங்கள் குறித்து விளக்கியதும் சார்பட்டாவில் நடிக்க ஷபீர் ஒப்பந்தமானதாக இணையதள செய்திகளுக்கு அவர் அளித்த பேட்டியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதுமட்டுமல்லாமல், 15 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வந்தாலும் தக்க சமயத்திற்காக காத்திருந்ததன் பலனாக டான்சிங் ரோஸ் கேரக்டரில் பிரபலமாகியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனக் கூறியுள்ள ஷபீர் கல்லரக்கல், உரிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்காவிட்டாலும் தலைக்கு மேல் கூறையும் உண்ண உணவும் உறுதுணையாக பெற்றோரும் இருந்ததே பெரிய மகிழ்ச்சிதான் என உருக்கமாக கூறியிருக்கிறார்.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷபீரின் டான்சிங் ரோஸ் கேரக்டரை புகழாதவர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு பதிவுகள் நிரம்பியிருக்கின்றன. மேலும் அவரது அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்கும் பாராட்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றனர். இப்போது ஹாட் சிட்டி ஆஃப் தி டாப்பிக் டான்சிங் ரோஸ்தான்.!
Also Read
-
🔴LIVE | கரூர் துயரம் - பேரவையில் காரசார விவாதம்... பழனிசாமியை கேள்விகளால் துளைத்தெடுக்கும் அமைச்சர்கள்!
-
முன்பதிவு பெட்டியில் உரிய டிக்கெட் இல்லாமல் ஏறினால் இனி நடவடிக்கை - தெற்கு ரயில்வே உத்தரவு !
-
“அனைத்தையும் விட மக்களின் உயிரே முக்கியம்; மக்களின் உயிர் விலைமதிப்பற்றது”: பேரவையில் முதலமைச்சர் பேச்சு!
-
"சி.பி.ஐ RSS-BJP-ன் கைப்பாவை என்று சொன்ன விஜய் இன்று அதன் கைப்பாகையாகிவிட்டார்" - முரசொலி விமர்சனம் !
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!