Cinema
ஹிப்ஹாப் ஆதியின் 'சிவகுமாரின் சபதம்' முதல் சிங்கிள்... யுவன் இசையில் 'ரங்க ராட்டினம்' பாடல்! #CineUpdates
ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’ முதல் சிங்கிள் வெளியானது...
ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நடிகராவும் பிஸியாக இயங்கி வருகிறார். தற்போது அவர் நடிப்பில் ’அன்பறிவு’, ’சிவகுமாரின் சபதம்’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இதில் அன்பறிவு படம் இறுதி கட்டத்தில் இருந்து வருகிறது. மற்றொரு படமான ‘சிவகுமாரின் சபதம்’ படத்தில் ஆதி நடிப்பதோடு மட்டுமில்லாமல் இயக்கியும் வருகிறார்.
மேலும் அவரே இந்தப் படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார். மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு ஆதி இயக்கும் படம் இது என்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதில் ஆதிக்கு ஜோடியாக மாதுரி நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக ‘சிவகுமார் பொண்டாட்டி’ எனும் பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் வியாபாரங்களும் தற்போது நடந்து வருகிறது.
யுவனின் இசையில் ‘குருதி ஆட்டம்’ படத்திலிருந்து வெளியான பாடல்!
‘8 தோட்டாக்கள்’ படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவாகிருக்கும் ‘குருதி ஆட்டம்’ படம் மதுரையில் இருக்கும் கேங்ஸ்டர்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. இதில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.
மேலும் ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி வைரலாகிருந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிளாக ‘ரங்க ராட்டினம்’ பாடல் வெளியாகியுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் பாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. யுகபாரதி எழுதியிருக்கும் இந்தப் பாடலை அந்தோணி தாசன் பாடியுள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.
Also Read
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!
-
இதற்கெல்லாம் பதில் வருமா? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கேள்வி எழுப்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
தீபாவளிக்கு அடுத்தநாள் பொதுவிடுமுறையா? : தமிழ்நாடு அரசின் அறிவிப்பு என்ன?