Cinema
நடிகை ஓவியாவின் முதல் வெப்சீரிஸ்... யூ-ட்யூபில் வெளியானது`மெர்லின்'!
தமிழ் சினிமாவில் ‘களவாணி’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா. தொடர்ந்து நடித்து வந்தவருக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இப்போது சினிமா தாண்டி ஒரு வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். `மெர்லின்' என இந்த சீரிஸுக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லர் ஏற்கெனவே வெளியாகிவிட்டது.
நடிகை ஓவியா களவாணி, மெரினா, கலகலப்பு போன்ற ஹிட் படங்களில் நடித்தார். தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தாலும், முன்னணி நடிகை பெயர் சொல்வது மாதிரி எந்தப் படமும் இவருக்கு அமையவில்லை. இருந்தாலும் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக நடித்து வந்தார்.
இந்தநிலையில் நடிகை ஓவியா முதல் முறையாக ஒரு வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். இந்த சீரிஸின் முதல் எபிசோட் இன்று மாலை 4 மணிக்கு `ஆரஞ்சு மிட்டாய்' யூட்யூப் சேனலில் வெளியாகியிருக்கிறது.
Also Read
-
”இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
”இது நாங்கள் உருவாக்கிய கூட்டணி” : எடப்பாடி பழனிசாமிக்கு தொல்.திருமாவளவன் பதிலடி!
-
”ஓரணியில் தமிழ்நாடு” கைகோக்கும் குடும்பங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
ஆகஸ்ட் மாதத்தில் ‘முதலமைச்சர் கோப்பை - 2025’ : முன்பதிவை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
25 மாநகராட்சிகள் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் அடிப்படை பணிகள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!