Cinema
நான்காவது படத்தை இயக்கத் தயாராகும் சி.வி.குமார்... அடுத்தடுத்த படங்களுக்கான கதைகள் ரெடி!
தமிழில் அட்டகத்தி, பிட்ஸா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி எனப் பல படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இப்போதும் பல படங்களுகான தயாரிப்பு வேலைகளில் இருக்கிறார்.
இவர் இயக்குநராக அறிமுகமான படம் 2017ல் வெளியான `மாயவன்'. தொடர்ந்து `கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்' படத்தையும் இயக்கினார். இவர் இயக்கத்தில் உருவான மூன்றாவது 'கொற்றவை' பட ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. இப்போது இவரது இயக்கத்தில் நான்காவதாக உருவாகும் படம் பற்றி அறிவித்திருக்கிறார்.
2017ல் வெளியான சந்தீப், லாவண்யா, ஜாக்கி ஷெரஃப் ஆகியோர் நடித்த `மாயவன்' படத்தின் இரண்டாம் பாகத்தை தான் அடுத்து இயக்க இருக்கிறார். தற்போது அந்தப் படத்துக்கான கதை எழுதும் பணியில் இருக்கிறார்.
சமீபத்தில் தனது ட்விட்டரில் ரசிகர்களில் கேள்விகளுக்கு பதிலளித்தவர் `இன்று நேற்று நாளை 2' படத்தின் ஷூட்டிங் மே, முதல் வாரத்தில் துவங்க இருக்கிறது எனக் கூறியிருக்கிறார்.
இதுபோக கொற்றவையின் அடுத்த இரண்டு பாகங்களையும் இயக்க இருக்கிறார், தயாரிப்பில் பீட்ஸா படத்தின் மூன்றாவது பாகமும் உருவாக இருக்கிறது.
எழுத்தாளர் தமிழ்மகனின் `நான் ரம்யாவாக இருக்கிறேன்', `ஆபரேஷன் நோவா', `வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்' ஆகிய புத்தகங்களின் திரைப்பட உரிமையையும் வாங்கியிருக்கிறார் சி.வி.குமார். ஒவ்வொரு படத்தின் அறிவிப்பும் அடுத்தடுத்து வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
திருவள்ளுவருக்குக் காவி உடை: முழு சங்கியாக மாறிய எடப்பாடி பழனிசாமி!
-
“இந்த மாதிரி கோமாளி கூட்டத்தோடலாம் நாம சண்டைபோட வேண்டியிருக்கு...” - துணை முதலமைச்சர் கலகல பேச்சு!
-
“தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
654 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் : மாணவர்களுக்கு AI பயிற்சி!
-
சட்டமன்றத் தேர்தல் : கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் கொண்ட குழு -தி.மு.க அறிவிப்பு!