Cinema
ஓட்டு போட்ட கையோடு ஜார்ஜியா பறந்த விஜய்... இனி ‘விஜய்65’ ஷூட்டிங்கில் பிஸி!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் `மாஸ்டர்'. இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டானது மேலும், ஓடிடி தளத்திலும் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இது விஜய் நடிக்கும் 65வது படம்.
இதில் ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி பிறகு தெலுங்குப் படங்களில் நடித்து மிகப்பெரிய நடிகையாக வளர்ந்திருக்கும் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் இதில் இன்னொரு ஹீரோயினும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கான ஷூட்டிங் பூஜையுடன் சமீபத்தில் சென்னையில் துவங்கியது.
இரண்டு நாட்கள் ஷூட் நடத்தி, பின்பு தேர்தல் முடிந்த பிறகு ஜார்ஜியாவுக்கு சென்று ஷூட்டிங்கை தொடர திட்டமிட்டிருந்திருந்தார்கள். அதன் படி நேற்று விஜய் சைகிளில் சென்று வாக்களித்தார். அது பரபரப்பாகவும் பேசப்பட்டது.
இப்போது தேர்தல் பரபரப்பு முடிந்த நிலையில், விஜய் ஜார்ஜியாவுக்கு கிளம்பிவிட்டார். அவர் விமான நிலையத்தில் புறப்படும் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. பதினாறு நாட்கள் ஷெட்யூலாக இந்த முதல்கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.
Also Read
-
7-வது முறையாக.. மகளிர் டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா.. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு தொடரும் சோகம்!
-
மக்களுக்கு வழங்கும் ‘பை’யில் கூட ஊழல்! : த.வெ.க.வின் முகமூடியை கிழித்து காய வைத்த பெண்!
-
பிரேசிலின் நம்பிக்கை... இறுதி விசிலுடன் உடைந்த கனவு - கண்ணீரில் முடிந்த நெய்மரின் உலகக் கோப்பை பயணம்!
-
கோவையில் 1000 சவரன் நகை திருட்டு : விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
-
“ஸ்டிக்கர் விஜய் அரசே.. வெட்கமே இல்லையா?” : தி.மு.க கடும் கண்டனம்!