Cinema
சிவகார்த்திகேயனை இயக்கவிருக்கும் கே.வி.ஆனந்த்: இந்த முறையாவது ஆக்ஷன் கதை கை கொடுக்குமா?
சிவகார்த்திகேயன் நடிப்பில் `டாக்டர்' படம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. `அயலான்' படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தப் படங்களுக்குப் பிறகு அட்லியின் உதவி இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் `டான்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்க இருக்கிறார் என்ற தகவல்கள் உலவி வருகிறது. சிவகார்த்திகேயன் - கே.வி.ஆனந்த் கூட்டணி சில ஆண்டுகளுக்கு முன்பே இணைய வேண்டியது, ஆனால் அப்போது நடக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது பெரிய பட்ஜெட்டில் தயாராகும் ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என்றும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால், இப்போது வரை இது குறித்து எந்த அதிகாராப்பூர்வத் தகவலும் வெளியாகவில்லை. சீக்கிரமே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால், காப்பான் படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படம் சிவகார்த்திகேயன் நடிக்கும் படமாக இருக்கும்.
இந்நிலையில், கே.வி.ஆனந்த தரப்பில் கூறியதாவது:- வைரமுத்து, கபிலன் போன்றோருடன் இணைந்து தமிழ்நாட்டில் நடைபெறும் மாஃபியா தொடர்பாக ஸ்கிர்ப்ட் வேளைகளில் கே.வி. ஆனந்த் ஈடுபட்டு வருவதாகவும் அதன் பிறகே சிவகார்த்திகேயனை அணுகி பேச இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !
-
"ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை சரியானது அல்ல" - உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா !