Cinema

திரையரங்க உரிமையாளர்கள் நிபந்தனையால் சிக்கல் : ‘ஸ்டார் விஜய்’ தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் ‘ஏலே’!

பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி போன்ற படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் 'ஏலே'. இந்தப் படத்தை YNOT Studios, Reliance Entertainment, Wallwatcher Films ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, ‘ஏலே' திரைப்படம் பிப்., 12 ம் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்கிலும், 27ம் தேதி OTTயிலும் வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், ‘ஏலே’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகி, 30 நாட்களுக்கு பிறகுதான் OTTயில் ரிலிஸ் செய்வோம் என தயாரிப்பாளர்கள் கடிதம் கொடுத்தால்தான் திரையரங்கில் வெளியிடுவோம் என திரையரங்க உரிமையாளர்கள் கூறினர்.

இதனால் அதிருப்தியடைந்த படக்குழு, ‘ஏலே' திரைப்படத்தைப் பிப்ரவரி 28ம் தேதி நேரடியாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏலே’ படத்தைத் சில காரணங்களால் திரையரங்கிற்குக் கொண்டு வர முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே 28ம் தேதி பகல் 3 மணிக்கு நேரடியாக ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கவே, விக்ரம் பிரபு நடித்த ‘புலிக்குத்திப்பான்டி’ மற்றும் யோகிபாபு நடித்த ‘நாங்க ரொம்ப பிசி’ ஆகிய படங்கள் சன் டி.வி-யில் நேரடியாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: “திரையரங்குகளில் எதேச்சதிகாரத்தை முற்றிலும் தவிர்த்தால்தான் கலைத்துறை மீளும்” - பாரதிராஜா எச்சரிக்கை!