Cinema
“ரத்தம், ரணம், ரெளத்திரம்” - ரிலீஸ் தேதியோடு வெளியானது ராஜமவுலியின் 'RRR' மோஷன் போஸ்டர்!
‘பாகுபலி’ வரிசை படங்களுக்கு பிறகு ராஜமவுலி இயக்கி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் இப்படத்தில், அஜய் தேவ்கன், ஆலியா பட், ரம்யா கிருஷ்ணன், சமுத்திரகனி, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சுதந்திரப் போராட்ட வீரர்களான சீதராமராஜூ, கொமராம்பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. 300 கோடி செலவில் டி.வி.வி. நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.
படத்தின் பணிகள் எப்போதோ தொடங்கிவிட்ட நிலையில், அது தொடர்பான எவ்வித அப்டேட்டுகளும் இல்லாமல் ரசிகர்களுக்கு படக்குழு ஏமாற்றத்தையே தந்து வந்தது. இந்நிலையில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு இன்று படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.
ரத்தம், ரணம், ரெளத்திரம் என RRR படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதோடு, 2021ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி படம் ரிலீசாகவிருப்பதாகவும் அந்த மோஷன் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது,
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ‘ஆர்.ஆர்.ஆர்’ உருவாகி வருகிறது. மோஷன் போஸ்டர் வெளியானதை அடுத்து ட்விட்டரில் #RRRMotionPoster என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது
Also Read
-
சுயேச்சை வேட்பாளரை விலைக்கு வாங்கிய த.வெ.க : கிழிந்து தொங்கும் தூய சக்தியின் முத்திரை!
-
ஆ.. தள்ளு.. தள்ளு.. தள்ளு : நடுரோட்டில் பழுதாகி நிற்கும் வெற்றிப் பயணம் பேருந்துகள் - TVK லட்சணம்!
-
த.வெ.க. அடிமை மாணிக்கம் தாகூர் வாயை அடக்க வேண்டும்.. இல்லையென்றால் அடக்கப்படும்! : திமுக கண்டனம்!
-
Attendance போடுவதற்கு முன் வரலாறு தெரிந்து பேசவும்: மாணிக்கம் தாகூருக்கு கனிமொழி என்.வி.என்.சோமு பதிலடி!
-
“கைது செய்தே காலத்தை ஓட்டிவிடலாம் என்கிற மிதப்பில் இருக்கிறாரா முதலமைச்சர்?” : கனிமொழி எம்.பி கேள்வி!