Cinema
“நம்ம மண்ணோட ஈரத்தை அடுத்த தலைமுறைக்கு சேர்க்கிறது நம்ம கடமை” - தனுஷின் ‘பட்டாஸ்’ ட்ரெய்லர்!
‘அசுரன்’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘பட்டாஸ்’. ‘கொடி’ படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள பட்டாஸ் படத்தில் சினேகா, மெஹ்ரின் பிர்ஸாடா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி ‘பட்டாஸ்’ படம் திரைக்கு வரவுள்ளது.
விவேக்-மெர்வின் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் பட்டாஸ் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
அதில், தற்காப்புக் கலையான கிக் பாக்ஸிங்கை மையமாக கொண்ட கதையமைப்பில் தனுஷ் அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். ‘அசுரன்’ படத்திலும் அப்பா கேரக்டரில் நடித்துள்ள தனுஷுக்கு இந்த படமும் கைகொடுக்குமா என்பது ரிலீஸுக்கு பின்னர் தெரியவரும்.
மேலும், ட்ரெய்லரில் “நமக்கு எது நல்லதுன்னு நம்ம மண்ணுக்குத் தான் தெரியும்; நம்ம மண்ணோட ஈரத்த அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கிறது நம்ம கடமை” போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், பட்டாஸ் பட ட்ரெய்லர் வெளியான சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. மேலும், ட்விட்டரில் #PattasTrailer என்ற ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
Also Read
-
2026ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.20 அன்று தொடக்கம்! : சபாநாயகர் அப்பாவு தகவல்!
-
திருவண்ணாமலையில் “வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025!” : முழு விவரம் உள்ளே!
-
“தன்னலம் கருதா உழைப்புக்கு வாழும் சாட்சி தோழர் நல்லகண்ணு ஐயா!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
-
“தமிழில் ‘வணக்கம்’ சொன்னால் போதுமா?” : ஒன்றிய அரசைக் கண்டித்த முரசொலி தலையங்கம்!
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!