சினிமா

‘தர்பார்’ ரிலீஸுக்கு முன்பே வெளியான அதிரடி தகவலால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

ஏ.ஆர்.முருகதாஸின் 'துப்பாக்கி 2' படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில் 'தர்பார் 2' குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

‘தர்பார்’ ரிலீஸுக்கு முன்பே வெளியான அதிரடி தகவலால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

'சர்கார்' படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் முதன்முறையாக ரஜினிகாந்துடன் இணைந்து உருவாக்கியுள்ள படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இதில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் ஆதித்யா அருணாசலம்.

‘சந்திரமுகி’ படத்துக்கு பிறகு ரஜினிக்கு ஜோடியாக தர்பாரில் நயன்தாரா நடித்துள்ளார். வில்லனாக சுனில் ஷெட்டி நடித்துள்ளார். மேலும், யோகி பாபு, நிவேதா தாமஸ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

‘தர்பார்’ ரிலீஸுக்கு முன்பே வெளியான அதிரடி தகவலால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து சென்சாரில் யு/ஏ சான்றிதழையும் ‘தர்பார்’ படம் பெற்றுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 9ம் தேதி உலகம் முழுவதும் தர்பார் படம் ரிலீஸாகவுள்ளது.

படத்தின் ப்ரொமோஷன் வீடியோக்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தர்பார் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில், தர்பார் படமே வெளியீட்டுக்காக காத்திருக்கும்போது அதன் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

‘தர்பார்’ ரிலீஸுக்கு முன்பே வெளியான அதிரடி தகவலால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

இது தொடர்பாக சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் அளித்துள்ள பேட்டியில், தர்பார் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான தொடக்கத்தை மையமாக வைத்தே தர்பார் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இதனையறிந்த ரஜினி ரசிகர்களுக்கு தர்பார் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் முதன்முறையாக உருவான ‘துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போதும் உருவாகும் என்றும் ஏ.ஆர்.முருகதாஸிடம் அவ்வப்போது முன்வைக்கப்படும் கேள்வியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories