Cinema
Legend சரவணன் நடிக்கும் புதிய படத்தின் பாடல் காட்சி ஷூட்டிங்!
தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் தோன்றிய, அந்நிறுவனத்தின் உரிமையாளர் Legend சரவணன் நடிப்பில் தற்போது புதிய திரைப்படம் உருவாகி வருகிறது.
இரட்டை இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவுப் பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
Legend சரவணன் வழங்கும் Production No - 1 படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்களுடன் Legend சரவணன், கீத்திகா திவாரி ஆகியோர் பங்கேற்று நடித்தனர்.
ரூபாய் 10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனை போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்றது. இதில் ஒவ்வொரு காட்சியிலும் Legend சரவணனின் நடனத்தை பார்த்து வியந்து அத்தனை நடனக் கலைஞர்களும் கை தட்டிப் பாராட்டினர்.
Also Read
-
“உதயநிதி மோஸ்ட் டேஞ்சரஸ்” என்று எதிரிகள் புலம்புகிறார்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“தமிழ்ப் பெண்களை, வெல்லும் பெண்களாக மாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : முரசொலி புகழாரம்!
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!