Cinema
ஹீரோ அவதாரம் எடுத்த லெஜென்ட் சரவணா: சென்னையில் பூஜையுடன் தொடங்கியது படம் (Photos)
சரவண ஸ்டோர்ஸ் உரிமையாளர்களில் ஒருவரான லெஜெண்ட் அருள் நடிக்கும் படத்தின் பூஜை இன்று தொடங்கியது.
தியாகராய நகர் முதல் சென்னையின் பல பகுதிகளில் கிளை பரப்பி இயங்கி வருகிறது சரவண ஸ்டோர்ஸ். இதன் உரிமையாளர்களில் ஒருவரான அருள், சமீப காலங்களாக சரவண ஸ்டோர்ஸின் விளம்பரங்களில் நடித்து பிரபலமானவர்.
தற்போது இவர், சினிமாவிலும் களமிறங்க தொடங்கிவிட்டார். விளம்பர படங்களில் லெஜெண்ட் சரவண ஸ்டோர்ஸுன் அருளை பெஸ்ட் பெஸ்ட் என ஆட வைத்த ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோரே அவரது முதல் படத்தை இயக்குகின்றனர்.
பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றது. இதில், ஏவிஎம் சரவணன், நடிகர் பிரபு, விவேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
லெஜெண்ட் அருள் நடிக்கும் இந்த படத்துக்கு தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளின் கால்ஷீட் கிடைக்காததால் புதுமுக நாயகியாக ஜீத்திகா திவாரி எனும் மாடல் அழகியை ஹீரோயினாக்கியுள்ளது படக்குழு.
மேலும், இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
பட பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது மட்டுமல்லாமல் சரவணா ஸ்டோர்ஸ் அருள் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்