Cinema
அஜித்தின் ‘வலிமை’ ஷூட்டிங் தேதி & ரிலீஸ் குறித்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!
‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு அஜித்தின் 60வது படமாக உருவாக உள்ளது ‘வலிமை’. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் இந்தப் படத்தை தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
போலிஸ் அதிகாரியாக அஜித் இந்தப் படத்தில் நடிக்கவுள்ளதால் அதற்கான தன்னை தயார்படுத்தி வருகிறார் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் பூஜை அக்டோபர் மாதம் 18ம் தேதியே நடந்தாலும், இதுவரை இன்னும் ஷூட்டிங் தொடங்காமலும், படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியிடாததாலும் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
சமீபத்தில் தனது மனைவி ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது புது லுக்குடன் இருக்கும் அஜித்தின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. அதற்குப் பிறகு ‘வலிமை’ படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்பட்டது.
இந்நிலையில், ‘வலிமை’ படத்தை கோடை விடுமுறைக்கு வெளியிட தயாரிப்பு குழு திட்டமிட்டிருந்த நிலையில் இயக்குநர் எச்.வினோத் கதையில் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதால் மேலும் 2 மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளதால் படத்தின் ஷூட்டிங்கும் தள்ளிப்போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, படத்தின் கதாநாயகி மற்றும் இதர நடிகர் நடிகைகள் குறித்த தேர்வு நடந்து முடிந்திருந்தாலும், அது தொடர்பான எந்தத் தகவலையும் வெளியிடாமல் படக்குழு அமைதி காத்து வருகிறது. ஆதலால், அடுத்த ஆண்டு தீபாவளிக்கு அஜித்தின் ‘வலிமை’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தனியார் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற தயாரிப்பாளர் போனி கபூர், ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 13ம் தேதி தொடங்கும் என்றும், 2020ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வலிமை படம் ரிலீஸாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுவரை வலிமை குறித்த எந்த தகவலும் வராமல் இருந்த நிலையில், தற்போது படத்தின் ஷூட்டிங் மற்றும் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியானது அஜித் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. மேலும், #ValimaiStartsOnDec13 #ValimaiDiwali2020 என்ற ஹேஷ்டேக்கையும் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!