சினிமா

‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ & வீடியோ!

வலிமை படத்துக்கான புதிய கெட்டப்பில் ரசிகர்கள் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ & வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அஜித் தனது 60வது படத்துக்காக, நேர்கொண்ட பார்வை கூட்டணியான எச்.வினோத் மற்றும் போனி கபூருடன் மீண்டும் இணைந்துள்ளார். படத்தில் போலிஸ் கதாப்பாத்திரத்தில் அஜித் நடிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடந்த இந்த படத்தின் பூஜையின் போது படத்துக்கான டைட்டில் வலிமை என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ & வீடியோ!

அஜித் - யுவன் காம்போ என்றதும் இருவரது ரசிகர்களும் குதூகலமாக வலிமை படத்தின் அடுத்தத்தடுத்த அப்டேட்டுகளுக்காக வெகு நாட்களாக காத்திருந்தனர்.

அதற்கிடையில், வலிமை படத்தில் வடிவேலு, நஸ்ரியா, எஸ்.ஜே.சூர்யா நடிப்பதாக தகவல் வெளியானதும் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் அது உறுதியாகவில்லை என்ற செய்தி வருத்தத்தை தந்தது.

‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ & வீடியோ!

இதனையடுத்து, படத்தின் ஷூட்டிங் வருகிற நவ.,24ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் "வலிமை படத்துக்காக அஜித் தன்னை தயார்படுத்தி வருகிறார். அவர் தயாரானதும் ஷூட்டிங் தொடங்கும்" என அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், துப்பாக்கிச்சுடும் போட்டியின் போது அஜித் தனது சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் இருந்து 1990,2000 ஆரம்பகட்டத்தில் இருந்தது போன்ற லுக்கில் இருந்தது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியது.

‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு இரட்டை வேடமா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ & வீடியோ!

இந்நிலையில், தனது மனைவி ஷாலினியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித்துடன் ரசிகர்கள் சிலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதில், அஜித் மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வித்தியாசமான மீசையில் இருந்துள்ளார். இதனை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும், விஸ்வாசம் படத்தை போன்று வலிமை படம் தொடர்பாகவும் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் வலிமை படம் குறித்த ஆவலை தூண்டியுள்ளது. மேலும், இந்த படத்தில் அஜித், இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா என்றும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி அதற்கேற்ப மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories