Cinema
‘நயன்தாரா திடீர் விரதம்’ - ஏன்? எதற்காக?
ரஜினியின் தர்பார் படத்தில் நடித்து முடித்திருக்கும் நயன்தாரா தற்போது நியூயார்க்கில் தனது பிறந்த நாளை காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். கடந்த நவ.,18ம் தேதி அங்கு பிறந்தநாளை கொண்டாடிய அவர் சென்னை திரும்பியதும் மீண்டும் பட வேலைகளில் இறங்கவுள்ளார்.
ஒன்று, விக்னேஷ் சிவன் தயாரிப்பிலான நெற்றிக்கண், மற்றொன்று ஆர்.ஜே.பாலாஜி நடித்து இயக்கவிருக்கும் மூக்குத்தி அம்மன். இதில் செய்தி என்னவென்றால், மூக்குத்தி அம்மன் படத்தில் நடிப்பதற்காக அந்த படக்குழுவே சைவத்திற்கு மாறியுள்ளதாம்.
இது தொடர்பாக அண்மையில் ஆர்.ஜே.பாலாஜியே பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார். அதில், மூக்குத்தி அம்மன் படம் முடியும் வரை படக்குழுவினர் எவரும் அசைவம் சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இது சாமி படமாக மட்டுமல்லாமல் சமூக கருத்து சொல்லும் படமாகவும் உருவாகவுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் அம்மனாக நயன்தாரா நடிக்கவுள்ளதால் அவரும் சைவத்திற்கு மாறியுள்ளார் என கூறிய அவர், கன்னியாகுமரியில் உள்ள கோவில் ஒன்றின் அம்மனுக்கு மூக்குத்தி அம்மன் என்ற பெயர் உள்ளதால் அதனையே படத்துக்கு வைத்துள்ளதாக கூறினார்.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு என்.ஜே.சரவணனும், ஆர்.ஜே.பாலாஜியும் இணைந்து இயக்குகின்றனர். இது 2020 சம்மருக்கு வெளிவரும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த மாதம் படப்பிடிப்பு பணிகள் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?